பொது செய்தி

இந்தியா

டிரம்ப்பிற்கு சிலை வைத்து வழிபடும் இந்தியர்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கான்கோயன் : தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து, தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.



latest tamil news



தெலுங்கானாவின் கோன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஷா கிருஷ்ணா. டிரம்ப்பின் தீவிர பக்தரான இவர், தனது வீட்டின் முன்பு டிரம்ப்பிற்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து, தினமும் வழிபாடு நடத்தி வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில், இந்தியா-அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் விரதம் இருக்கிறேன். எந்த வேலையை துவங்குவதற்கு முன்பும் அவரது படத்தை வைத்து வழிபட்ட பிறகு துவங்குவது எனது வழக்கம்.


latest tamil news


அவரை சந்திக்க விரும்புகிறேன். எனது கனவை நிஜமாக்கித் தர வேண்டும் என இந்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். டிரம்ப் எனக்கு கடவுள் போன்றவர். அதனால் தான் அவருக்கு சிலை அமைத்துள்ளேன். இந்த சிலை அமைக்க கிட்டதட்ட ஒரு மாதம் ஆனது. இந்த சிலையை 15 பேர் சேர்ந்து அமைத்துள்ளனர் என்றார். கிருஷ்ணாவின் ஆசையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கிராமத்தினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


latest tamil news




latest tamil news



இது பற்றி கிருஷ்ணாவின் நண்பர் ரமேஷ் ரெட்டி கூறுகையில், அவரது உண்மையான பெயர் புஷா கிருஷ்ணா. ஆனால் அவர் டிரம்ப்பிற்கு மீது கொண்ட தீவிர பக்தி மற்றும் அவரை வழிபட துவங்கியது முதல் கிராமத்தினர் அனைவரும் அவரை டிரம்ப் கிருஷ்ணா என்றே அழைக்கின்றனர். அவரது வீட்டையும் டிரம்ப் வீடு என்றே சொல்கிறார்கள். டிரம்ப் மீதான பக்தியை அனைவரும் பாராட்டுகின்றனரே தவிர, யாரும் தடை சொல்லவோ எதிர்க்கவோ இல்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-பிப்-202015:20:29 IST Report Abuse
இந்தியன் kumar காரணம் இல்லாமல் காரியம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Karthik - CHENNAI,இந்தியா
20-பிப்-202014:08:46 IST Report Abuse
Karthik கருப்பன் குசும்புகாரன் அமெரிக்கா விசாவுக்கு அடி போடுறான்.....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-பிப்-202011:05:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni அரை முக்கால் முழுக்கிருக்குபோல இருக்கே இந்தாளுக்கு ட்ரம்பின்மீது அவ்ளோபக்தியா பார்த்துண்ணே இருங்க அடுத்துபதவிபோனால் தன வீட்டுக்கே இட்டாந்து வச்சுண்டு காப்பாத்துவாரு என்ஜாய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X