தேர்தலுக்கு பின் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : டிரம்ப்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



latest tamil news



டிரம்ப் அடுத்த வாரம், 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். இருப்பினும் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது. ஒருவேளை தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ளப்படுமா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆமதாபாத்தில் என்னை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் மைதானம் வரை 7 லட்சம் பேரை நிறுத்த உள்ளனர். எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும். உலகின் மிகப் பெரிய மைதானம் திறக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார்.


latest tamil news


பிப்.,24 ம் தேதி பிற்பகல் குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு வரும் டிரம்ப், மைதான திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கும் அவர் செல்ல உள்ளார். அன்று மாலை டில்லி வரும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-பிப்-202017:00:57 IST Report Abuse
Endrum Indian குழந்தாய் டிரம்ப் அடுத்த தேர்தலில் நீவீர் வரமாட்டீர் என்று உலகில் உள்ள அனைவருக்கும் தெரியுமே????அப்போது வரும் ப்ரெசிடெண்ட் என்ன நினைக்கிறாரோ அதை தானே செய்வார் அப்போது???
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-202014:28:11 IST Report Abuse
ஆப்பு இப்போ ஒண்ணுமில்லியா? அப்போ எதுக்கு செவுரெல்லாம் கட்டி, இவியமெல்லாம் வரைஞ்சு....ஆனாலும் அவுரு சொல்ற செய்தி கூட இங்கே யாரும் வெளியே சொல்லவே இல்லியே... ராணுவ ரகசியமோ?
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
19-பிப்-202012:55:58 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வந்தால் மங்களம் தான் இல்லை எனில் சுபமங்கலம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X