போலீஸ் ஸ்டேஷன் முன் மாட்டு இறைச்சி விநியோகித்த காங்.,

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (106)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோழிக்கோடு : கேரளாவில் காங்., பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான பிரவீன் குமார் தலைமையிலான கட்சி தொண்டர்கள், முக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்து மாட்டு இறைச்சி சமைத்து விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.latest tamil news


கேரளாவில் போலீஸ் பயிற்சி கழக உணவகத்தில் உணவு பட்டியலில் இருந்து மாட்டு இறைச்சி நீக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோழிக்கோட்டில் உள்ள முக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் மாட்டு இறைச்சி, அனைவரும் காங்., கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், சங் பரிவார் பக்கம் சாயும் முதல்வர் பினராயி விஜயனுக்கு தெளிவாக புரிய வைக்கவே இதை செய்தோம். பதவியேற்பதற்கு முன் உடனடியாக பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த அவர், அதன் பிறகு பா.ஜ.,வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். அத்துடன் டிஜிபி.,யாக லோக்நாத் பகிராவை நியமித்துள்ளார். குஜராத் கலவர வழக்கில் இருந்து மோடியையும், அமித்ஷாவையும் காப்பாற்றியவர் லோக்நாத். தற்போது அவர் பினராயி விஜயனின் ஒப்புதலுடன், சங் பரிவார் அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். பினராயி விஜயனின் இரட்டை வேடத்தை கேரளா முழுவதும் காங்., அம்பலப்படுத்தும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh Kumar - Chennai,இந்தியா
20-பிப்-202015:04:43 IST Report Abuse
Santhosh Kumar இவ்வளவு கேடு கேட்டு கீழிறங்க வேண்டாம் இந்த காங்கிரஸ் என்ற கட்சி. கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையும் சுத்தமாக பொய் விட்டது. ஹிந்துக்களை அழிப்பதாக நினைத்து, தங்களை தாங்களே அஜித்துக்கு கொள்ளும் அவளை நிலை. காங்கிரசுக்கு பாடை காட்டும் வேலை வந்து விட்டது. சாரி சவக்குழியில் வைக்கும் வேளை வந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
20-பிப்-202005:10:48 IST Report Abuse
Naz Malick அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் மேல் மாடுகளை அறுத்து நாடு முழுவதும் பகிர்ந்து உண்கிறார்கள் ...BEEFEATER என்கிற ஒரு மிகப்பெரிய chain restaurant அங்கு ஆயிரக்கணக்கான restaurant களை திறந்து 70 மேல் ஆண்டுகளாக ஜெகஜோதியாக வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறது... அதே போல் உலகம் முழுவதும் ஒவ்வுறு நாளும் மக்கள் உண்ண பல்லாயிர கணக்கான மாடுகள் அறுக்க படுகின்றன . இப்போ டிரம்ப் இந்தியா வருவதால்... மோடி அண்ணன் அவரிடம் மாட்டிறைச்சியை உண்ண வேண்டாம் மற்றும் அமெரிக்காவில் மாட்டை வெட்ட வேண்டாம் என்று சொல்லலாமே ?..... அண்ணன் சொல்லுவாரா?
Rate this:
Share this comment
Venkatesh - Chennai,இந்தியா
20-பிப்-202007:04:36 IST Report Abuse
Venkateshமாட்டை திண்ணும் கும்பலில் இருப்பவரே, அமெரிக்காவில் மாட்டை பற்றிய அறிய விஷயம் தெரியாது, இந்து நாம் பிறந்ததனால் அதை பற்றி உனக்கும், எனக்கும் நன்றாக தெரியும், உனக்கும் எனக்கும் அது செய்கிற நன்மைகள் ஏராளம், இந்தியாவில் பிறந்த நீ நல்லது செய்ய முயற்சி செய், தேவை இல்லாமல் பேசக்கூடாது...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-பிப்-202020:56:53 IST Report Abuse
bal செருப்பால அடிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X