ஜாமியா பல்கலை தாக்குதல்: மத்திய அரசுக்கு ரூ.2.66 கோடி பில் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜாமியா பல்கலை தாக்குதல்: மத்திய அரசுக்கு ரூ.2.66 கோடி பில்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (24)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஜாமியா பல்கலை.,யில் நடந்த மோதலில் சேதமடைந்த 25 சிசிடிவி கேமிராக்களுக்காக ரூ.2.66 கோடிக்கான பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



latest tamil news



டில்லி ஜாமியாக பல்கலை.,யில் சில நாட்களுக்கு முன் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, அங்கு வந்த சீருடை அணிந்த போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதாக சிசிடிவி கேமிரா பதிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நூலகத்திற்குள் வருவதற்கு முன் மாணவர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் வீடியோ வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக பல வீடியோக்கள் வெளியானதால் எது உண்மை என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் இச்சம்பவத்தின் போது ஜாமியா பல்கலை.,யில் உள்ள 25 சிசிடிவி கேமிராக்கள் சேதமடைந்ததாகவும், இதன் மதிப்பு ரூ.4.75 லட்சம் என கூறப்படுகிறது. சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததற்கான செலவான ரூ.2.66 கோடிக்கான பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 75 கதவுகள், 220 ஜன்னல்கள், 175 நாற்காலிகள் உள்ளிட்டவை இந்த மோதலில் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X