ஒருபுறம் புகழாரம்... மறுபுறம் எதிராகத் தீர்மானம்: அமெரிக்கா இரட்டை வேடம்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவைப் பாராட்டிக்கொண்டிருக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதே வேளையில், டிரம்ப்க்கு நெருக்கமான லிண்ட்சே கிரஹாம், இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, ஒரு கடிதம் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மனைவி மெலேனியாவுடன் வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இதையடுத்து, இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பாராட்டும் வகையில், 'மோடி ஒரு ஜென்டில்மேன். இந்திய சுற்றுப்பயணம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. அதற்காக நான் காத்திருக்கிறேன்' என, பல கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.


latest tamil news


கடந்த, 1970ம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு 'வர்த்தகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் நாடு' என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கியிருந்தது. டிரம்ப் அதிபரானவுடன், அந்த அந்தஸ்து பறிக்கப்பட்டது.அதன்பின், இந்திய - அமெரிக்க இடையேயான வர்த்தகத்தில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. டிரம்ப் இந்தியா வந்தவுடன் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என, நம்பப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், டிரம்ப்புக்கு நெருக்கமான, குடியரசுக் கட்சி செனட்டரான லிண்ட்சே கிரஹாம், இந்தியாவுக்கு எதிராக, அமெரிக்காவில் காய் நகர்த்தி வருகிறார்.


காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம் குறித்து, அமெரிக்கக் காங்கிரசில், இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து, உள்துறைச் செயலர் மைக் பாம்பியாவுக்கு, லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news


காஷ்மீரில் இந்திய அரசு சுயாட்சியைப் பறித்துள்ளது. ஆறு மாதங்களாக அங்கு, இணையதளச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில், இத்தனை நாள் இணையதளச் சேவையை முடக்கி வைத்திருப்பதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், 70 லட்சம் மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை. வர்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.தனிநபர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மத சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ., சட்டம் அமல் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் நாட்டை இழக்கும் அபாயம் ஏற்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும் அக்கடிதத்தில், 'வரும் 30 நாள்களுக்குள், இந்த விஷயங்களில் நடவடிக்கை எடுக்க இந்தியாவை வலியுறுத்த வேண்டும்' என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.டிரம்ப் இந்தியா வரும் நிலையில், பிப்., 12-ம் தேதி, இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது வியப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
19-பிப்-202018:47:45 IST Report Abuse
K.Sugavanam நல்லா வச்சு செய்யறாங்கோ....நம்ப நாட்டை வேண்டுமென்றே வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி பல சலுகைகளை இழக்க வைத்துவிட்டு,அவர்களுக்கு சாதகமாக நாம் வர்த்தக ஒப்பந்தம் போடுவோம் என எப்படி எண்ணினானார்களோ? .நாம் என்ன கேணையர்களா ? ..மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதிரி அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டி அவர்களை நாம் நன்கு வைத்து செய்யவேண்டும்.."போடா போடா புண்ணாக்கு,போடாதே தப்பு கணக்கு" என்னும் கருத்து மிக்க திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது...
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-பிப்-202021:50:44 IST Report Abuse
தாண்டவக்கோன்@ KS, அமெரிக்காட்டெ நீங்க சொல்றா மாதிரில்லாம் ஒன்னும் பண்ணமுடியாது, அவங்க பொருளாதார தட போட்டாங்கன்னா நம்ப வாங்கற ராணுவ தளவாடங்க, High Tech, medical equipments & இத்யாதிகளுக்கு ஒரு ball bearing கூட வாங்க முடியாது (Russian Federation ட்ட வாங்குனத தவுத்து ), சொந்தமாவும் பண்ணமுடியாது...
Rate this:
Cancel
r.thiyagarajan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-202017:36:06 IST Report Abuse
r.thiyagarajan dear us senate Do your work in your country and don't put your nose in india , whatever we will decide and implement and you don't have rights to stop.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-பிப்-202016:56:00 IST Report Abuse
தாண்டவக்கோன் //காஷ்மீரில் இந்திய அரசு சுயாட்சியைப் பறித்துள்ளது. ஜனநாயக நாட்டில், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.தனிநபர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மத சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. CAA அமல் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் நாட்டை இழக்கும் அபாயம் ஏற்படும்.// ஆளாளுக்கு இப்டி காறி துப்புறாங்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X