கோலத்தில் கலக்கும் ரங்கவல்லி அணி...

Updated : பிப் 24, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement


latest tamil news


சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சமீபத்தில் காஞ்சி விஜேயேந்திரர் வருகை தந்தார்.அவரை வித்தியாசமான முறையில் வரவேற்பதற்காக அவர் வரும் வழியெங்கும் வண்ணக்கோலமிட்டிருந்தனர்.


latest tamil news


அழகாகவும், பிரம்மாண்டமாக, புதுமையாக இருந்த கோலங்களை பார்த்து மகிழ்ந்த ஜெயேந்திரர், ‛யார் இந்த கோலங்களை போட்டது'? என்று விசாரித்து அறிந்து பாராட்டினார்.


latest tamil news


அவர்கள் ஒருவர் இருவர் அல்ல ஒரு அணி, அந்த அணிக்கு பெயர் ரங்கவல்லி அணி. சென்னையைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி, கோலம் போடுவதில் ஆர்வம் அதிகம், தான் போட்ட கோலங்களை வாட்ஸ் அப்பில் தோழியருக்கு அனுப்பிவைத்தார் அவர்களும் பதிலுக்கு தங்கள் கோலங்களை அனுப்பிவைத்தனர்.


latest tamil news


நாம் போடும் கோலங்கள் நமக்குள் மட்டுமே பரிமாறிக் கொள்கிறேமே இதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சென்றால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்தனர்.
ரங்கவல்லி என்ற பெயரில் கோலமிடும் பெண்கள் அணியை அமைத்தனர் ,இந்த அணியின் அழகிய கோலங்களை பார்த்து வடபழநி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி நேரத்தில் கோலம் போட முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.



latest tamil news


நவராத்திரி விழாவிற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோலங்களை பார்த்து பாராட்ட அதன் பின் வந்த அழைப்பின் பேரில் இந்த அணியினர் சென்னை,பெங்களூர் உள்பட 29 கோயில்களில் கோலமிட்டு பெயர் பெற்றுள்ளனர்,விரைவில் மந்திராலய கோயிலுக்கு செல்ல இருக்கின்றனர்.
இப்போது இந்த ரங்கவல்லி அணியில் 250 உறுப்பினர்கள் உள்ளனர் , எங்கே கோலம் போடப்போகிறோம் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவோம் உறுப்பினர்கள் அந்தப்பகுதிக்கு வந்துவிடுவர் பின் கோலமிட்டுவிட்டு சென்றுவிடுவோம்.
கோலம் போடுவது என்பது நமது பராம்பரியமான அழகுக்கலை, இதனால் மனதிற்கு உடம்பிற்கு பயிற்சி கிடைப்பதுடன் ஆத்மதிருப்தியும் உண்டாகிறது.எங்கே கோலமிடுவது என்றாலும் நாங்கள் எங்கள் செலவில் சென்றுதான் கோலம் போடுவோம் கோலமிடுவதற்கு தேவையான பொருட்களையும் நாங்களே கொண்டு செல்வோம்.இதில் நாங்கள் செய்யும் புதுமையை பார்த்துவிட்டு இளைய தலைமுறை பெண்கள் பலரும் எங்களுக்கும் இதைச் சொல்லிக்கொடுங்கள் என்று கேட்கின்றனர் நாங்களும் சந்தோஷமாக சொல்லிக்கொடுக்கிறோம்.
எங்கள் ரங்கவல்லி அணியின் சார்பாக மிக அதிக கோலங்கள் போட்டு கின்னஸ் ரிக்கார்ட் செய்யவேண்டும் என்பது எங்கள் விருப்பம் அதை நோக்கியே தற்போது நாங்கள் பயணிக்கிறோம் என்று கூறி முடித்தார் லட்சுமிதேவி.
தொடர்புக்கு:rangavallikolam@gmail.com
-எல்.முருகராஜ்.murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
22-பிப்-202021:00:38 IST Report Abuse
raghavan விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்... ஜெயேந்திரர் சுவாமிகள் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X