பா.ஜ., அரசுக்கு பைத்தியம்: சிவசேனா கடும் தாக்கு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் இருக்கக் கூடாது என கூறுவது அரசுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்ற நிலையையே காட்டுகிறது என குறிப்பிட்டு சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.



latest tamil news



ராணுவத்தில் பெண்களை உயர் பதவியில் நியமிக்கலாம். மகளிர் அதிகாரிகளுக்கான நிரந்தர கமிஷனை உருவாக்க வேண்டும். அதற்கு உங்கள் மனநிலையில் மாற்றம் வர வேண்டும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக தாக்கி சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் வரக் கூடாது. அது எதிரி நாட்டிற்கு சாதகமாக அமைந்து விடும் என்ற மத்திய அரசிற்கு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கும். பெண்களால் கடினமாக பணிகளை செய்ய முடியும் என்பதில் சந்தேகம் எழுப்புவது தான் முற்போக்கு பற்றி பேசும் அரசின் உண்மையான நிலைப்பாடு.


latest tamil news


அரசு தனது மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம். 1971 ல் பிரதமர் இந்திரா தலைமையிலான அரசால் தான் இந்தோ-பாக்., போரில் நாம் வெற்றி அடைய முடிந்தது. மத்திய அரசுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. ஒரு நாள் பெண்கள் ராணுவ படைகளுக்கும் தலைமை ஏற்பார்கள். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறிய கருத்துக்கள் அவர்களின் பிற்போக்கு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
19-பிப்-202018:07:34 IST Report Abuse
r.sundaram ராணுவத்தில் பெண்களை சேர்ப்பதே தப்பு. வேண்டுமானால் ராணுவ இதர பணிகளில், உதாரணமாக செவிலியர், டாக்டர் போன்ற வேளைகளில் சேர்க்கலாம். சில நேரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் ராணுவ பெண் மாட்டிக்கொண்டால் அவரது நிலை என்னவாகும் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். சிந்திக்காமல் பேசுகிறது சிவசேனா.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
19-பிப்-202017:49:10 IST Report Abuse
Ram எதையும் மேலோட்டமாக அணுகக்கூடாது , பெண்கள் இதில் சிறந்து விளங்குவார்களோ அதில்தான் அவர்களை சேர்க்கமுடியும்
Rate this:
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
19-பிப்-202016:43:38 IST Report Abuse
CSCSCS ஆணுக்கு பெண் சமம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாது . இதை கூட புரிந்து கொள்ளாமல் எதிலும் அரசியல் செய்வது இந்தியா அரசியல் வியாதிகளின் பேதமை . நம் தலை எழுத்து இதையெல்லாம் கேட்கவேண்டியிருப்பது . ராணுவத்தின் உயர் அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கு அடிக்க பாதுகாப்பு தேவைபடும் . மேலும் ஆண்கள் போல பெண்கள் எல்லை பதட்டம் உள்ள பகுதிகளில் செயல் பட முடியாது .இதில் என்ன தவறு ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X