பொது செய்தி

இந்தியா

கேரளாவை கலக்கும் தமிழச்சியின் பாடல்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Nanjamma, AyyappanumKoshiyum, Prithviraj, BijuMenon, நஞ்சம்மா, அய்யப்பனும்கோஷியும், பிரித்விராஜ், பிஜூமேனன்,

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: கேரள சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார் நஞ்சம்மாள் என்ற தமிழ்ப் பெண்.
கேரள இயக்குனர் சாச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜூ மோகன் நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படம் "அய்யப்பனும் கோஷியும்". இப்படத்தில் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லும் 'களக்காத்த சந்தனமேரம்' என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. யு-டியூப்பில் மட்டும் இப்பாடலை 39 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்வையிட்டுள்ளனர். 1.5 லட்சத்திற்கும் அதிகமான பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கும், குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் தமிழ் பெண்ணான நஞ்சம்மா. படத்திலும் இவர் மாலைவாழ் பெண் போன்றே நடித்துள்ளார். மலையாள திரையுலகமும், மீடியாக்களும் அவரை பாராட்டி வருகிறது. கேரளா அரசும் கிராமிய பாடலுக்கான விருதை கொடுத்து கவுரவித்துள்ளது.


latest tamil news




சினிமாவில் இவர் நடித்து, பாடியிருந்தாலும் சினிமா பற்றியும் அவ்வளவாக தெரியாது. இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் பிரித்விராஜ், பிஜூ மோகன் கூட யாரென்று தெரியாது என்கிறார். பாடுவது இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அதனால் யார் எங்கு பாட கூப்பிட்டாலும் கால, நேரம் பார்க்காமல் அவர்களுடன் கிளம்பிவிடுவாராம். "அய்யப்பனும் கோஷியும்" படத்திற்காக இவர் பாடிய சிறிய பாடல் படத்திற்கு பெரிய புரொமோஷனாக மாறும் என்பது கூட இவருக்கு தெரியாது.

நஞ்சம்மா, ராணு மென்டல் (வட மாநிலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பாடி திரிந்தவர்), கேரளாவை சேர்ந்த விவசாயி ராகேஷ் உன்னி (உன்னை காணாத பாடல் விஸ்வரூபம்), பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி போன்ற திறமை வாய்ந்தவர்கள் நம் மண்ணில் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்றனர். இவர்களுக்கு இப்போது வாழ்வில் சிறு வெளிச்சம் கிடைத்துள்ளது. இவர்களை போன்று திறமை இருந்தும், இன்னும் வெளிச்சம் படாமல், அட்டப்பாடி மாதிரியான மலை கிராமங்களில் வசிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் வாழ்வும் ஒளியேற்றப்படுமா.?

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-பிப்-202021:43:36 IST Report Abuse
Sampath Kumar இங்கும் அரசியில ??? கலைக்கு எந்த எல்லையும் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-பிப்-202014:40:04 IST Report Abuse
 Muruga Vel ராணு மெண்டல் இல்லிங்க ..மண்டல் ..
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
20-பிப்-202009:24:47 IST Report Abuse
arudra1951 நஞ்சம்மா தமிழ் நாட்டு சினிமாக்காரன் கூப்பிட்டால் வராதீங்க இங்கு வந்து பாட வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X