பொது செய்தி

இந்தியா

வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க முடிவு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
aadhar, aadhaarcard, voterid, electioncommission, lawministry, government, sunilarora, தேர்தல்ஆணையம், வாக்காளர்அட்டை, ஆதார், மத்திய அரசு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயரை நீக்கவும், ஒருவர், இரு இடங்களில் ஓட்டுப்போடுவதை தடுக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை தயாரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெறும் முயற்சியில் சட்டத்துறை அமைச்சகம் தீவிரமாக உள்ளது. மத்திய அரசு முடிவு மூலம், வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ளவர்களின் ஓட்டுரிமையை பறிக்கும் செயல் தடுக்கப்படும்.

நேற்று (பிப்.,18) நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் ஆணையர்களிடம் சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சட்டத்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடையே நடந்த ஆலோசனை கட்டத்தின் போது, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறும் போது, 2004 - 05 காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் தெரிவித்த தேர்தல் சீர்திருத்தங்களை விரைந்து அமல்படுத்தும்படியும், இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்தும்படியும் வலியுறத்தினார்.

அப்போது, சட்டத்துறை செயலர் நாராயண் ராஜூ, தேர்தல் ஆணையம் தெரிவித்த 40 சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பல கட்டங்களில் விவாதம் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.


latest tamil news
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு சாதகமாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்காக ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அமைச்சரவைக்கு விரைவில் குறிப்பு அனுப்பப்பட உள்ளது.

ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு மூலம், பாதுகாப்பாக, மின்னணு முறையில் ஓட்டளிப்பது சாதகமாகும். மேலும், உள்நாட்டு தொழிலாளர்கள், வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், தங்களது ஓட்டை பதிவு செய்வதற்கு உதவும். அவர்களின் அடையாளம் உறுதி செய்த உடன், தொழில்நுட்ப வசதிகளுடன் ஓட்டளிப்பது குறித்த வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2015ம் ஆண்டு, தேசிய வாக்காளர் பட்டியல் சீர்திருத்த திட்டத்தின்படி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை துவக்கியது. 32 கோடி ஆதார் எண்களை இணைத்த நிலையில், ஆதார் பயன்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த கெடுபிடிகள் காரணமாக அந்த பணியை கைவிட்டது.

பின்னர் கடந்த ஆண்டு, ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்து, ஆதார் எண்களை சேகரிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் கடிதம் அனுப்பியது. இதனை கொள்கை அளவில் ஏற்று கொண்ட சட்டத்துறை அமைச்சகம், அமைச்சரவை ஒப்புதலுக்கு குறிப்பு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
20-பிப்-202005:10:42 IST Report Abuse
atara Why not people of DMK or Congress do strike and damage public records of Voterid cards , Aadhar cards and Ration cards all are thier vote banks with multiple records they maintain which they do under the tasks.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
19-பிப்-202020:53:28 IST Report Abuse
Krishna CAA-NRC-Aadhar etc etc Are Not at all Required.
Rate this:
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-202018:42:17 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி தேசத்துரோகிகளுக்கு இதில் உடன்பாடு இருக்காது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X