பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்வீடனில் தொழிலதிபர்! கோவையில் பிச்சைக்காரர்!: மாற்றத்துக்கு காரணம் இதுதான்!

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (105)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோவை: ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபர் கிம். இவர், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர், கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் அங்கு சென்றார்.latest tamil news


அங்கு சில நாட்கள் தங்கியிருந்தவர், பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார். பிச்சையிடுவோருக்கு இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.இவரிடம் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், போலீசாரும், 'உங்களுக்கு ஏன் இந்த நிலை' எனக் கேட்டு வருகின்றனர். அவர்களிடம், 'என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால், என் மனதில் நிம்மதி இல்லை. என் தாய் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்தேன். ஆனால், அது எனக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை. இந்தியா வந்தேன்.


ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிம், மனைவியுடன், மூன்றுமாத சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் பயிற்சி பெற்ற அவர், பின்னர் அங்கிருந்து வெளியேறி, கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று பிச்சையெடுத்து வருகிறார். ஏன் இந்த நிலை என்று கிம்மிடம் பலரும் கேட்டால், 'என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால், மன நிம்மதி இல்லை. அதனால், எனது ஆன்மிக குருவின் அறிவுரைப்படி, பிச்சையெடுத்து வாழ்கிறேன். இதில் எனக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்கிறார். விசா முடிந்தவுடன் தாய்நாட்டுக்கு திரும்பவுள்ள கிம், நிம்மதியை தேடி மீண்டும் இந்தியா வருவாராம்.

latest tamil newsஏழை எளிய மக்கள்போல சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது ஆன்மிக குருவின் அறிவுரைப்படி, மக்களிடம் பிச்சையெடுத்து, எனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறேன். இதனால் எனக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கிடைக்கிறது' என, வெளிநாட்டுப் பிச்சைக்காரரான கிம் கூறி வருகிறார்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், பிச்சையெடுப்பதைக் கோவை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, குறைந்தது 10 ரூபாய் வரை கொடுத்தும் வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
21-பிப்-202010:30:32 IST Report Abuse
sankar அந்த மடம் போங்க இந்த மடம் போங்க பிக்ஷை எடுங்க என்ன வேணா செய்யுங்க அறிவாலய மடம் மட்டும் போயிராதீங்க a
Rate this:
JSS - Nassau,பெர்முடா
21-பிப்-202013:03:21 IST Report Abuse
JSSஅறிவாலய மேடம் சென்றால் மொத்த பணத்தையும் ஆட்டையை போட்டு விடுவார்கள்....
Rate this:
Hari - chennai,இந்தியா
22-பிப்-202012:08:04 IST Report Abuse
Hariவிலைமாது விடம் பணம் பிடுங்கியவர்கள்) இன்னும் யாரோ....
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21-பிப்-202004:59:38 IST Report Abuse
 nicolethomson பிச்சை என்பதற்கும் இரந்து வாழ்தலுக்கும் வித்தியாசம் உள்ளது தினமலர்
Rate this:
r ganesan - kk nagar chennai,இந்தியா
23-பிப்-202008:13:50 IST Report Abuse
r ganesanஅற்புதமான பதிவு...
Rate this:
Cancel
Elil Arasan Dhani - Melbourne,ஆஸ்திரேலியா
21-பிப்-202004:49:12 IST Report Abuse
Elil Arasan Dhani இது ஈஷா யோகா மையத்தின் விளம்பர வேலை இதற்கு வெள்ளையனை உபயோகப்படுத்தி உள்ளனர் . எப்போது மனைவி கொலை வழக்கை உக்கடம் காவல்துறை தூசி தட்டி எடுக்கும் ?
Rate this:
crap - chennai,இந்தியா
21-பிப்-202013:05:06 IST Report Abuse
crapஇவர் எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்....
Rate this:
pradeep - stockholm,சுவீடன்
21-பிப்-202014:34:04 IST Report Abuse
pradeep ஸ்வீடன் ல வேல பார்க்க கறி வலிச்சி போய் அங்க பிச்சை எடுக்குது. தொழில் அதிபரும் கிடையாது புண்ணாகும் கிடையாது ,நானும் ஸ்வீடன் ல தான் இருக்குறேன் ,அவனோட பாஸ்போர்ட் ல பர்சனல் நம்பர் இருக்கு .முடிஞ்ச அனுப்புங்கோ ஒரு நாளுல ஜாதகத்தை சொல்றேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X