பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., பிறந்த தினம் பெண் குழந்தை பாதுகாப்பு நாளாக அறிவிப்பு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஜெயலலிதா, பிறந்தநாள், பெண்கள்பாதுகாப்பு, முதல்வர்இபிஎஸ், eps, jayalalithaa, admk,

சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்புகள்:
* ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.,24 அன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும்
* ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்
* பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு பரிசு தொகுப்பு
* பாலின விகிதங்களை சரிசமமாக கொண்டு வர முயற்சி மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
* ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ15 கோடியில் தங்கும் விடுதி அமைக்கப்படும்
* உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1,500 ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்


latest tamil news




* பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளை பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
* பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் வயது, கல்விக்கு ஏற்ப அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


காத்திருக்கிறோம்:

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக பேசினார். இதற்கு முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பதிலளித்தனர். சண்முகம் பேசுகையில், விடுதலை விவகாரத்தில் இனி கவர்னரே முடிவெடுக்க வேண்டும். அவரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது, என்றார். முதல்வர் பேசுகையில், 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என காத்திருக்கிறோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-202000:47:03 IST Report Abuse
Ramesh R சிறை தப்பிய குற்றவாளிகள் தினம் என்று அனுசரிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-பிப்-202000:24:25 IST Report Abuse
Vena Suna நல்ல காலம்.... 500 அடிக்கு ஒரு சிலை வைக்கறேன்னு சொல்லல..
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
19-பிப்-202022:07:05 IST Report Abuse
karutthu ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ15 கோடியில் தங்கும் விடுதி அமைக்கப்படும் அதே போல அனைவரும் குறிப்பாக ஒய்வு பெற்ற மூத்த குடிமகன்கள் தங்க அனுமதிக்கவேண்டும் குறைந்த கட்டணம் வசூலிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X