பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வந்த சீனர்களுக்கு கொரோனாவா? சுகாதாரத்துறை மறுப்பு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னை துறைமுகத்தில் சீனாவில் இருந்து கப்பலில் வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



latest tamil news


சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 2000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த வைரசால் உலகம் முழுவதும் 70,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் இருந்து பரவ துவங்கிய இந்த வைரஸ், தற்போது 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இருந்தும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உயிரிழப்புக்களும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளும் நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.


latest tamil news


இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர்கள் சிலருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வூஹான் நகரில் இருந்த சமீபத்தில் மீட்டு வரப்பட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இந்தோ-திபெத்திய எல்லையில் அமைக்கப்பட்ட முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் இவர்களை அனைவரும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் இருந்து சென்னைக்கு கப்பலில் வந்த சீன பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும். இதனால். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கிண்டி கிங் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சுகாதாரத்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், 2 சீன தொழிலாளர்களுகு்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-202017:41:24 IST Report Abuse
Ramakrishnan கொரோனா வைரஸை விட கொடியது கருணா வைரஸ். ஏற்கனவே சீனி மூட்டை சாக்குகளுடன் தின்று இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-பிப்-202017:15:09 IST Report Abuse
Malick Raja வந்திருக்கும் கப்பலை உலக போக்குவரத்து விதியின் நடைமுறையின் கீழ் மட்டுமே உரிய வகையில் நடக்கும் ..அதில்லாமல் சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன் திரும்பி போ என்று சொல்லமுடியாது .. டொக் செய்யப்படாமல் பகுதி வழியில் திருப்பி அனுப்பி இருக்கலாம் ..ஆனால் அவ்வாறு செய்யமுடியாது காரணம் இந்திய கப்பல்கள் சீன துறைமுகத்தில் இருப்பதையும் அறியவேண்டும் .. சும்மா கணனி கிடைத்து கருத்துக்களை அள்ளி விடுவது அள்ளி முடிந்தவர்கள் மட்டுமே கேட்பார்கள்
Rate this:
Share this comment
19-பிப்-202017:52:02 IST Report Abuse
Arunachalam, Chennaiஅப்போ தாடையில் முடி வைத்தவருக்கு தான் எல்லாம் தெரியும்!...
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
19-பிப்-202017:04:32 IST Report Abuse
Natarajan காரோண வைரஸ் விஷயத்தில் மோடி அரசு அற்புதமாக ஏங்கியது இது பாவாடை குல்லா மற்றும் தாண்டவக்கோனே கும்பல்கஹாலுக்கு உரைக்காது
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-பிப்-202018:38:56 IST Report Abuse
தமிழ்வேல் இன்றய நிலவரப்படி ஜப்பான் ஓரத்தில் உள்ள கப்பலில் இந்தியர்கள் 1 மாதமாக காத்துள்ளார்கள். அதில் 5 பேருக்கு வரைஸ் தாக்குதல் உள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X