அரசியல் செய்தி

தமிழ்நாடு

கத்தியின்றி ரத்தமின்றி கருத்தடை: ஆண்களுக்கு அமைச்சர் அழைப்பு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news


சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., உறுப்பினர் பரமசிவம், 'பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த பிரச்னையைக் களைய, ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில், அரசிடம் ஏதேனும் திட்டமுள்ளதா?' எனக் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகைக் கட்டுப்பாடு முக்கியம். கருத்தடை செய்ய தனியாக துறை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்குக் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


latest tamil news


ஆண்களுக்கு, கத்தியின்றி ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி, இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு 80 பேருக்கும், 2019-ல் 800 பேருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய தயாராக உள்ளோம். கருத்தடை செய்துகொள்ள ஆண்கள் முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதிலால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-பிப்-202004:31:32 IST Report Abuse
Mani . V "கத்தியின்றி ரத்தமின்றி கருத்தடை" - இப்ப குட்கா சாப்பிடுவதும் அதேதான் சார்.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
20-பிப்-202002:33:52 IST Report Abuse
kumzi மூர்க்கனுங்களுக்கு மொதல்ல பண்ணுங்க சார் இனபெருக்கத்துல தா குறியா இருக்கானுங்க
Rate this:
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
20-பிப்-202000:36:30 IST Report Abuse
Vetri Vel அடுத்த சீட்ல இருக்கிற ஜெயக்குமார் னு ஒருத்தர் ...மாதிரி அலையுறாராம்... ரோட்டுக்கு வா வீட்டுக்கு வா னு.. ஒரு பொருத்தமான கேண்டிடேட்..கூட்டிகிட்டு போவும் சீக்கிரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X