பொது செய்தி

தமிழ்நாடு

ஊழல் இருந்தாலும் தவறில்லை: குஷ்பு குஷி விளக்கம்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
ActressKushboo, Kushboosundar, Naansirithal,

இந்த செய்தியை கேட்க

சென்னை : ஊழல் இருந்தாலும் தவறில்லை, அது இல்லாமல் இப்போது எதுவும் நடப்பதில்லை என நடிகை குஷ்பு பேசினார்.

சுந்தர் சி. - குஷ்பு தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரித்து, ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் உட்பட பலர் நடித்து கடந்தவாரம் வெளியான படம் ‛நான் சிரித்தால்'. இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி படம் வெளியான நான்காவது நாளான நேற்று(பிப்.,18) நடத்தினர். இதில் பேசிய குஷ்பு, இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம்.


latest tamil newsஎனக்கு சக்களத்தி நடிகர் ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். என் வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்கிறேன் என்றார்,

பேசும் போது இவர் ஊடல் என்று சொன்னது ஊழல் என கேட்டது. இதுபற்றி ரவிக்குமார் கேட்க, ஊழல் இருந்தாலும் தவறு இல்லை. ஊழல் இன்றி இன்றைக்கு எதுவும் நடப்பதில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
20-பிப்-202006:18:22 IST Report Abuse
Sankare Eswar இப்போது நிரூபித்துவிட்டாய்.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
20-பிப்-202004:11:48 IST Report Abuse
Siva Kumar ஊழல்களுக்கு தாய் தந்தையரே திமுகவும் காங்கிரஸும்தானே. ரவிக்குமாரும், குஷ்பூவும் வாங்கிய கருப்புப்பணமும் ஊழலின் வடிவமே.
Rate this:
Cancel
20-பிப்-202001:41:57 IST Report Abuse
ஸாயிப்ரியா ஊழல் இல்லா அரசியல் கிடைக்காது. தவறில்லை என்று பொன் எழுத்தில் பொறிக்கும் விதத்தில் பேசிய குஷ்பு அவர்கள் கோயில்கட்டி வணங்க தகுதியானவர் என்று இப்போதும் சொல்வார்களா?இரசிகர்கள் . எந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X