அழுத்தம் கொடுத்து ஆட்களை கொல்லும் பா.ஜ.,: மம்தா

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா : அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, அழுத்தம் தந்து பலரையும் மத்திய அரசு கொலை செய்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.



latest tamil news


மேற்குவங்கத்தில் நடந்த நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பல திரிணாமுல் காங்., கட்சி தலைவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரும், நடிகருமான தாஸ் பால் (61) மும்பையில் நேற்று (பிப்.,18) மாரடைப்பால் காலமானார். நிதி நிறுவன மோசடி தொடர்பாக இவரிடமும் விசாரணை நடைபெற்று வந்தது. இவரது மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று மம்தா பேசினார்.

அப்போது அவர், மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்டனத்திற்குரியது. இதில் யாரும் தப்பவில்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக 3 மரணங்களை பார்த்து விட்டேன். சட்டம் அதன் வேலையை பார்க்க வேண்டும். ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இது போன்ற அவமானங்களும், பிரசாரங்களும் மக்களின் வாழ்க்கையை முடித்து விடுகிறது.


latest tamil news


மத்திய அரசின் அமைப்புகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாக திரிணாமுல் காங்.,ஐ சேர்ந்த 3 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த அமைப்புகள் தனிமனிதனின் மனநிலையை எவ்வாறு நிலை குலைய வைக்கும் என்பதை தபாஸ் பாலின் மரணம் சொல்லும். எந்த தவறும் செய்யாமலேயே மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்ளட்டும். ஆனால் தபாஸ் பாலும் மற்றவர்களும் என்ன தவறு செய்தார்கள் என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
20-பிப்-202002:19:22 IST Report Abuse
S.Ganesan அப்போ தப்பு செய்யாமல் இருந்திருக்க வேண்டும். குற்றமுள்ள நெஞ்சு பதைபதைக்கிறது. மேலும் இதில் எதோ உள்குத்து இருக்கும் என்றே தோன்றுகிறது. அல்லது இறந்தவர்கள் உண்மையை சொல்ல விடாமல் மம்தா கொடுத்த மன அழுத்தத்தில் இறந்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kannan rajagopalan - Chennai,இந்தியா
19-பிப்-202021:13:28 IST Report Abuse
kannan rajagopalan யாரு செத்தாலும் சி எ எ வுக்கு எதிர்ப்புனால, அரசியல் காழ்ப்பு, வரி சுமை , கடன் தொல்லை இதெல்லாம் எதிர் கட்சி அஸ்திரங்கள் . தெலுங்கானா போராட்டம் சமயத்திலும் இது போல எல்லா சாவுக்கும் இப்படித்தான் செஞ்சாங்க . தனி அந்தஸ்து இல்லை என்று செத்ததாக ஆந்திர மாநிலத்தில் . இப்போ அம்மா இதை சொல்லுது .
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-பிப்-202020:46:39 IST Report Abuse
bal இவங்க பேச்சு மற்றும் செய்தி வந்தாலே மன அழுத்தம் வருது. இவங்க தூண்டிவிட்டு அந்த மக்களுக்கு ஒன்னும் பண்ணமாட்டாங்க...சிங்குர் என்னாச்சு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X