பொது செய்தி

இந்தியா

போலி ஆவணம் மூலம் ஆதார் அட்டை: 127 பேருக்கு நோட்டீஸ்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: போலி தகவல்களை அளித்து ஆதார் அட்டை வாங்கியதாக 127 பேருக்கு யுஐடிஏஐ அமைப்பின் ஐதராபாத் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கும், அவர்களின் குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.latest tamil news


இது தொடர்பாக யுஐடிஏஐ வெளியிட்ட அறிக்கை: ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. ஆதார் கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவர் 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என ஆதார் சட்டப்படி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் வழங்கக்கூடாது என யுஐடிஏஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள எங்களது அலுவலகத்திற்கு, 127 பேர் போலி தகவல்களை அளித்து ஆதார் எண் பெற்றுள்ளதாக போலீசார் அறிக்கை அனுப்பினர். அவர்கள் ஆதார் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் தான், குறிப்பிட்ட 127 பேருக்கும், வரும் 20ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி, உரிய காரணங்களை விளக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்த நோட்டீசுக்கும், குடியுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆதார் எண் ரத்து செய்யப்படுவதற்கும், ஒருவரின் நாட்டு குடியுரிமைக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. விசாரணையின் போது, பொய் தகவல் அல்லது போலி ஆவணங்கள் அளித்து ஆதார் எண் பெற்றது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண்ணை ரத்து செய்யவோ, சஸ்பெண்ட் செய்யவோ சட்டத்தில் இடமுண்டு இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
19-பிப்-202020:30:16 IST Report Abuse
Krishna Hang All AntiNational Rulers-Officials Who Issued Aadhar to almost all Infiltrators. Such mental Aadhar Infiltrators are also Being thrown out by many Courts
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-பிப்-202017:39:18 IST Report Abuse
தமிழ்வேல் "ஆதார் அடையாளத்துக்கான சான்று, குடி உரிமைக்கல்ல" என்று அதிலேயே குறித்துள்ளது. அப்படி உள்ள நிலையில் எதற்கு 182 நாட்கள் இருந்தாக வேண்டும் ? வெளிநாட்டில் தொழில் புரியும் ஒரு இந்தியன் ஆதார் பெற உரிமை இல்லையா ? அவன் எப்படி சிம்கார்ட், வங்கி கணக்கு, பாண் கார்ட் (வரிகட்டுவதற்கு), ஓட்டு இவைகளுக்கெல்லாம் ஆதார் தேவைப்படுகின்றதே ??? என்ன சட்டமடா இது ?
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
19-பிப்-202016:30:32 IST Report Abuse
kumzi பொய் கொள்ளை கொலை கற்பழிப்பு எல்லாம் மூர்க்கனுங்களோட குலத்தொழிலாச்சே
Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
19-பிப்-202020:17:12 IST Report Abuse
Ab Cdஇந்த கொசு தொல்லை தாங்க முடியல அடிசி விரட்டுங்க ......
Rate this:
kumzi - trichy,இந்தியா
20-பிப்-202002:22:16 IST Report Abuse
kumziவங்காளதேச கள்ளக்குடியேறி பிறப்பு அத்தாட்சி பத்திரம் வச்சிருக்கியா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X