மாசுபாட்டை குறைக்க யோசனை: கட்கரிக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
gadkari, nitingadkari, supremecourt, pollution, சுப்ரீம்கோர்ட், உச்சநீதிமன்றம், மாசுமாடு, கட்காரி, நிதின்கட்காரி,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கட்காரியிடம் புதுவிதமான கொள்கைகள் உள்ளன என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இது சம்மன் அல்ல எனவும், அமைச்சரின் கருத்தை அறிய விடுக்கப்படும் வேண்டுகோள் என தெரிவித்துள்ளது.

மின்னணு கார்கள் குறித்த அரசின் கொள்கை அமல்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்தே தலைமையிலான அமர்வு கூறுகையில், மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் கட்கரியிடம் புதுவிதமான கொள்கைகள் உள்ளன. அவர் நீதிமன்றத்திற்கு வந்து, அதனை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். முடிவு எடுக்கும் இடத்தில் அவர் உள்ளார் என தெரிவித்தனர்.


latest tamil news


இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அரசு வழக்கறிஞர், இது அரசியல் ரீதியில் பார்க்கப்படும் எனக்கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி கூறுகையில், அவருக்கு சம்மன் அனுப்புவதாக நினைக்க வேண்டாம். இது வேண்டுகோள். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ள ஒருவர் தேவை. அவர் வர முடியுமா என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் கட்டணம் வசூலித்து கொண்டு, மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், பட்டாசு மற்றும் பயிர் கழிவுகளை எரிப்பதால், ஏற்படும் மாசுபாடு, குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். ஆனால், வாகனங்கள் பெரிய கவலைக்குரியது. நீதிமன்றத்தில் உள்ள மற்ற சில வழக்குகளில், மின்சார வாகனங்களை பயன்படுத்துவது குறித்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது. அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சுற்றுச்சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை டில்லிக்கு மட்டும் பாதிப்பு இல்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கே பாதிப்பு ஏற்படும் எனக்கூறியதுடன், மத்திய அரசு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
19-பிப்-202018:05:44 IST Report Abuse
pattikkaattaan மின்சார வாகனங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்கவேண்டும் .. இது காலத்தின் கட்டாயம்
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
19-பிப்-202016:26:38 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே தீபாவளி பட்டாசு மட்டும் தான் மாசுள்ளது. புத்தாண்டு இரவு, திருமணம், தலைவர்கள் வரவேற்பு முதலிய நாட்களில் பயன்படுத்தப்படும் பட்டாசுக்கள் மாசில்லா பசுமை பட்டாசுகளாக தானாகவே மாறிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-பிப்-202016:14:25 IST Report Abuse
ஆரூர் ரங் நீதிமன்றத்தின் பெரும்பாலான நடவடிகைகளை ஆன்லயனிலேயே நடத்தலாம் .போக்குவது நெரிசல் குறையும் செய்வீர்களா? கிரிமினல் விசாரணைகளை சிறைகளிலேயே நிரந்தர கோர்ட் அமைத்து நடத்தினால் இன்னும் சிரமம் குறையும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X