பொது செய்தி

இந்தியா

உங்களை போல அவர்களுக்கும் உரிமை: போராடுபவர்களுடன் மத்தியஸ்தம் குழு பேச்சு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி ஷாஹீன் பாக் பகுதியில் சிஏஏ.,க்கு எதிராக சாலையை மறித்து போராட்டம் நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் குழு, எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமையுள்ளது போல, சாலையை பயன்படுத்துபவர்களுக்கும் உரிமையுள்ளது என பேச்சு நடத்தியது.latest tamil news


சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தெற்கு டில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் 67 நாட்களாக சாலையை மறித்து, தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில் போராட்டங்கள் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்துக்கு போராட்டத்தை மாற்ற வேண்டும். இது தொடர்பாக, போராட்டக்காரர்களுடன், மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் பேச்சு நடத்துவர். முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வாஜாஹத் ஹபிபுல்லா, அவர்களுக்கு உதவுவார், என உத்தரவிட்டனர்.


latest tamil news


அதன்படி, போராட்டக்களத்திற்கு சென்ற குழு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அவர்கள் பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி இங்கு வந்துள்ளோம். ஒவ்வொருவரிடமும் பேசி அனைத்து பிரச்னைகள் குறித்தும் கேட்க முயற்சிப்போம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த பிரச்னையில் முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

நீதிமன்றத்தின் ஆணையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும். எங்களின் எந்த முடிவையும் திணிக்க நாங்கள் வரவில்லை. எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு என கோர்ட் கூறியுள்ளது. ஆனால், நம்மளை போல சாலைகளை பயன்படுத்துவதற்கும், கடைகளை திறப்பதற்கும் மக்களுக்கு உரிமைகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
20-பிப்-202010:34:08 IST Report Abuse
konanki ரயில்வே தண்டவாளங்கள் அரசுடையது. அதில் தனியார் ரயில் செல்ல அனுமதிக்கும் படி எடுத்த முடிவு தவறு ( இப்போதய பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த முடிவு எடுத்தாலும் காழ்ப்புணர்ச்சி யுடன் கொடி தவறு என்று வாதாடுவார் கொடி . அதற்கு காரணம்வேறு விஷயம்)வாதாடும் கொடி போன்றவர்கள் அரசு போட்ட சாலையில் அரசாங்க பஸ் செல்ல அனுமதி இல்லை . அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல தடை. தினமும் பள்ளி செல்லும் சி.றுவர்/சிறுமியர்க்கு தொல்லை.தினமும் ஆபிஸ் செல்ல குறிப்பாக மகளிருக்கு படும் துயர். மொத்தத்தில் அரசு சாலை போராட்டக்கார்களுக்கு மட்டுமே சொந்தம். அவர்கள் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தாலாம். போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்யும் இயக்கங்களுக்கு மட்டுமே ஜனநாயக உரிமைகள். சாதாரண சாமான்ய மக்களுக்கு இந்த நாட்டில் சாலையை உபயோகிக்கும் அடிப்படை உரிமை கூட கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
20-பிப்-202010:20:14 IST Report Abuse
venkatan நாம் தீவிரவாதத்தில் மனித உரிமை பற்றி பேசுவது போல் போராட்ட எதிர்ப்பு மட்டும் மனித உரிமை சாமானியர்களுக்கு அல்ல.
Rate this:
Share this comment
Cancel
??????? - Thiruvaiyaru,இந்தியா
20-பிப்-202009:51:47 IST Report Abuse
??????? இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் 2019 குடியுரிமை சட்டம் என்றால் என்ன? நாட்டின் குடிமகன்கள் யார் என்று வரையருக்கும் சட்டமே குடியுரிமை சட்டம் ஆகும் இந்தியாவில் எப்பொழுது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது? குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 1986, 1992, 2003, 2005, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X