இங்கிலாந்து குடியுரிமை: ஆவணமின்றி தவிக்கும் முதியவர்கள்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின், பல்வேறு மாற்றங்களை இங்கிலாந்து செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் வசிக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை, தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.latest tamil news


இதனால், அங்குள்ள ஏழைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரும் பாதிப்படைந்துள்ளனர். இத்தாலியைச் சேர்ந்தவர் ஆன்டனியோ பின்னெல்லி. 95 வயது முதியவரான இவர், கடந்த, 68 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 32 வருடங்களாக அரசின் ஓய்வூதியமும் வாங்கி வருகிறார். இவரது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என, இங்கிலாந்து அரசு கூறியிருக்கிறது.கடந்த 1952ல் இங்கிலாந்திற்குக் குடியேறிய ஆன்டனியோ கூறுகையில், 'நான் இங்கிலாந்திற்கு வந்தபோது என்னிடம் கொடுக்கப்பட்ட வெளிநாட்டினர் சான்றிதழை இன்னும் வைத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய வங்கிக் கணக்குகளைத் கேட்கின்றனர்' என, வேதனையுடன் கூறுகிறார்.மனைவியையும், மகனையும் இழந்த ஆன்டனியோ தன்னுடைய பேரக்குழந்தைகளுடன் தற்போது வசித்து வருகிறார்.


latest tamil news


'70 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் ஆன்டனியோவுக்கு தற்போது குடியுரிமையை நிரூபிப்பது ஒரு சுமையைப்போல முன் நிற்கிறது. அரசின் முடிவால், ஆன்டனியோ போல், பல முதியவர்கள், ஏழை எளியமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்' என, இங்கிலாந்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்கும் வகையில், இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம், '75 சதவீத வெளிநாட்டினருக்கு ஏற்கெனவே குடியுரிமை ஆவணங்கள் கிடைத்துவிட்டது. மீதமிருப்பவர்களிடம் தான் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
20-பிப்-202010:52:59 IST Report Abuse
Sridhar அங்கேயும் அதே பிரச்சனையா? என்ன செய்வது? ஒரு ஆபரேஷன் செய்துகொள்வது என்றால், கஷ்டம் தான், வலிக்கும், ஒழுங்காக சாப்பிடமுடியாது, நடக்க முடியாது, தூங்கமுடியாது... ஆனால் இதனை கஷ்டங்களுக்கு பிறகு நன்மை நடக்குமல்லவா? நாடு முன்னேற வேண்டுமென்றால் சில கஷ்டங்களை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-பிப்-202019:28:45 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam 31/12/ 2020 வரை காலம் இருக்கின்றது. இப்படியான நிலை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் நடைமுறைக்கு வரும் நிலை ஏற்படலாம். மலேசியா ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-202016:52:56 IST Report Abuse
Janarthanan இந்தியா இதை செய்தால் தவறு ??? எங்கடா நேத்து வந்த அந்த லேபர் பார்ட்டி லேடி இதை கேளு ??? அந்த அம்மா இப்பொழுது பாகிஸ்தானுக்கு விசிட் அடிச்சு இருக்காங்கலாமா ??? அவன் அவன் அவேங்க நாட்டை சட்ட விரோத குடியேறிகள் இடம் இருந்து காப்பாற்ற தான் பார்ப்பார்கள் ??? நம்ம ஊரு குரூப் அரசியில் செய்வதற்க்காக கேவலமா நாட்டின் பாதுகாப்பில் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X