ஐ.நா., போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகும் இலங்கை: விஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க தடை

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: இலங்கையில், 2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், ராணுவப் படைக்குத் தலைமை தாங்கிய ஷவேந்திர சில்வா மீது, நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக, ஐ.நா., சபை குற்றம் சாட்டியது.


latest tamil news


இந்நிலையில், கடந்த ஆண்டு, இலங்கையின் ராணுவ தளபதியாக சில்வா நியமிக்கப்பட்டார். கடந்த 14ம் தேதி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் மைக் போம்போ தன் டுவிட்டர் பக்கத்தில், 'இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, நீதிக்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டதால், ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கும், பவுத்த மத பிரிவான அஸ்கிரிய குழு, விடுத்துள்ள அறிக்கையில், 'இலங்கை மீது அமெரிக்கா செலுத்தி வரும் அழுத்தத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது இந்த அழுத்தத்தின் வெளிப்பாடு தான். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மீதும் எதிர்காலத்தில் அமெரிக்கா இவ்வாறான தடையை விதிக்க வாய்ப்புள்ளது' என, தெரிவித்தது.


latest tamil news



துரோகிகளுக்கு எச்சரிக்கை

இந்நிலையில், இன்று (19ம் தேதி) மாலை, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளதாவது:ராணுவ தளபதிக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்ததற்கு, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியினர் இழைத்த துரோகமே காரணம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தளபதி மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


எனவே, ஐ.நா.,வின் 30/1 தீர்மானத்தில் இருந்து விலக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நாட்டைக் காட்டிக் கொடுக்கக் காத்திருக்கும், இலங்கையில் பிறந்த துரோகிகள் விரைவில் களையெடுக்கப்படுவர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.உலக அளவிலான பார்வைக் கொண்டுள்ள இலங்கைப் போர் மீதான ஐ.நா.,வின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக பிரதமர் அறிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


என்ன சொல்கிறது 30/1 தீர்மானம்

கடந்த 2015 செப்., மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. அந்த தீர்மானத்தின் முக்கிய கூறு 30/1. அதில், 'இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரின் போது, நடைபெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறலுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். அனைத்து இன, மொழியினர் மீதும் நல்லிணக்கம் கட்டி எழுப்பப்பட வேண்டும். அதை கட்டாயம் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.மேலும், 'மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க வேண்டும்' என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்திற்கு இசைவு தெரிவித்து, இலங்கை அரசு அதை ஏற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-202013:19:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இலங்கைக்கு மோசடி அரசு முழு ஆதரவு தரும்.
Rate this:
Cancel
Murugan - Bangalore,இந்தியா
20-பிப்-202012:21:34 IST Report Abuse
Murugan பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் எந்த தேவையுமில்லாமல் கொன்று குவித்தவர்கள் கண்டிப்பாக நிம்மதியாக இருக்க முடியாது அதற்கான தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் அதிலிருந்து தப்ப முடியாது கர்ம பலன் என்று ஒன்று என்றும் இருக்கிறது . இந்த இலங்கை அரசாங்கம் தப்பி தவறி தமிழர்கள் மீது மீண்டும் கை வைத்தால் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இப்பொழுது உள்ள இலங்கை அரசை உடனே தூக்கி எறியும் ,
Rate this:
Sankar - Chennai,இந்தியா
21-பிப்-202012:29:16 IST Report Abuse
Sankarநாம் இலங்கை ராணுவத்தை குறை கூறுவதற்கு முன்னாள், தமிழ் நாட்டில் மக்களை ஏமாற்றி திரியும் தி மு க வினரை தண்டிக்க வேண்டும். அவர்கள் நினைத்திருந்தால் அந்நாளில் மத்திய அரசில் பங்கு கொண்டுஇருந்த இவர்கள் கண்டிப்பாக அந்த கொடூர படு கொலைகளை தடுத்து நிறுத்தி இருக்கலாம். பதவி வெறி பிடித்த கருணாநிதி குடும்பம் இதற்க்கு முழு பொறுப்பு...
Rate this:
Cancel
20-பிப்-202009:19:37 IST Report Abuse
ருத்ரா ஈழத்தமிழர்களின் நடந்து முடிந்த? விதி அனுமன் வாலில் இட்ட தீ. மறக்கவோ மறுக்கவோ முடியாத கொடுமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X