டிரம்ப் பயன்படுத்தும் கார், விமானத்தில் என்ன விசேஷம்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிரம்ப் பயன்படுத்தும் கார், விமானத்தில் என்ன விசேஷம்?

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (11)
Share
DonaldTrump, AirforceOne, TheBeast, Car, Trump, India, America, President, அமெரிக்க அதிபர், டிரம்ப், ட்ரம்ப், ஏர்போர்ஸ்ஒன், திபீஸ்ட், கார், இந்தியா, அமெரிக்கா

புதுடில்லி: இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரத்யேக கார் (தி பீஸ்ட்), இந்தியா வரவுள்ளது. அவர் வரவிருக்கும் 'ஏர்போர்ஸ் ஒன்' விமானம் மற்றும் 'தி பீஸ்ட்' காரில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவையாக உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகின்ற 24, 25 தேதிகளில் இந்தியா வருகிறார். டிரம்ப் எங்கு சென்றாலும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 'தி பீஸ்ட்' காரை பயன்படுத்துவார். அதிபரின் இந்திய வருகைக்காக ஆமதாபாத்தில் உள்ள ஹோட்டல்களில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியுள்ளனர்.

மேலும், டிரம்ப் வருவதற்கு முன்னதாக 'தி பீஸ்ட்' காரும், பாதுகாப்பு வாகனங்கள், பாதுகாப்பு ஆயுதங்களும் இந்தியா வர உள்ளன. இந்த பீஸ்ட் கார் மூலமாக குஜராத்தில் ஊர்வலமாக செல்லும் டிரம்ப், பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார்.


latest tamil newsகாரின் சிறப்பம்சங்கள்:


* 'தி பீஸ்ட்' கார், அமெரிக்க அதிபருக்காகவே தனிச் சிறப்புகளுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும். இந்த காரின் ஜன்னல் கண்ணாடி, பாலி கார்பனேட்டால் ஆன 5 அடுக்குகள் கொண்டது. துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத அளவிற்கு கண்ணாடிகள் வலுவானவை.
* காருக்குள் இருந்து கொண்டே தாக்கும் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணீர் புகை குண்டுவீச்சு கருவிகள், அதிபருக்கான ரத்தப் பைகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடக்கியுள்ளன.
* டிரைவர் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களும், ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.
* காரின் வெளிப்புறம், 5 இஞ்ச் அளவிற்கு தடிமனானது. இது ராணுவ வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தும் திடமான ஸ்டீல், டைட்டேனியம், அலுமினியம் மற்றும் செராமிக்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement


* அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் என்ற அமைப்பால் டிரைவருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம், சவாலான சூழ்நிலைகளிலும் காரை ஓட்ட முடியும். அவசர காலத்தில் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படும்போது 180 டிகிரியில் காரை திருப்பி தப்பி செல்வது குறித்தும் டிரைவருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
* செயற்கைகோளுடன் தொடர்பு கொள்ளும் வகையிலான தொலைபேசி காரில் வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக அமெரிக்க துணை அதிபர் மற்றும் பென்டகனுக்கு காரில் இருந்தவாறு பேசலாம்.
* காரில் அதிபருடன் 4 பேர் மட்டுமே அமர முடியும். டிரைவருக்கும், அதிபர் இருக்கைக்கும் இடையே இருக்கும் கண்ணாடி தடுப்பை, அதிபரால் மட்டுமே திறக்க முடியும்.
* காரின் ஆயில் டேங்க் மீது குண்டு விழுந்தாலும் வெடிக்காத அளவிற்கு உறுதியான பாதுகாப்பு பிளேட்டுகளால் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* காரின் கதவுகள் 8 இஞ்ச் தடிமனானவை. கதவுகளை மூடிவிட்டால், கெமிக்கல் ஆயுதங்களால் கூட கதவுகளை துளைக்க முடியாது.
* காரில் உள்ள சென்சார் மூலம் நியூக்கிளியர், கெமிக்கல் மற்றும் பயாலஜிக்கல் தாக்குதல்களையும் எளிதாக கண்டறிந்துவிடலாம்.


latest tamil news
அதேபோல் அவர் வரவிருக்கும் 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்திலும் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. பறக்கும் கப்பல் என வர்ணிக்கப்படும் இந்த விமானத்தில் தான் அமெரிக்க அதிபர் உலகில் எங்கு சென்றாலும் பயணம் செய்வார். இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள்:

* மொத்தம் 232 அடி நீளமும், 195 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஆறு மாடி கட்டடத்தின் உயரத்திற்கு சமமானது.


latest tamil news


* விமானத்தின் உள்ளே மூன்று தளங்கள் உள்ளன. இதில், கருத்தரங்கு அறை, உணவருந்தும் அறை, மருத்துவமனை, செய்தியாளர் சந்திப்பு அறை, அதிகாரிகள் அறை என பல வசதிகள் உள்ளன.
* 100 பேருக்கு உணவு தயாரிக்கும் சமையலறை உள்ளது.
* விமானத்தில் உள்ள மின்னணு பாதுகாப்பு தளவாடங்கள், எதிரி நாட்டு ரேடார்களை குழப்பி, தாக்குதலில் இருந்து தப்ப உதவுகிறது.
* பறந்து கொண்டிருக்கும்போதே நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வசதியும் உள்ளது.
* விமானத்தின் வெளிப்பாகம், அணுகுண்டு தாக்குதலில் கூட சேதமடையாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsமாற்று ஏற்பாடு

டிரம்பை அழைத்துக்கொண்டு வரும் 'ஏர் போர்ஸ் ஒன்' விமானம், புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறது. ஒருவேளை வானிலை மோசமாக இருந்தால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X