டில்லி மகளிர் ஆணைய தலைவி விவாகரத்து| My Fairytale Ended": Delhi Women's Panel Chief Swati Maliwal On Divorce | Dinamalar

டில்லி மகளிர் ஆணைய தலைவி விவாகரத்து

Added : பிப் 19, 2020 | கருத்துகள் (19)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி மாநில அரசின் மகளிர் ஆணையத்தலைவி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.latest tamil newsடில்லி மாநிலத்தின் பெண்கள் கமிஷனின் தலைவியாக இருந்து வருபவர் சுவாதி மாலிவால். ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவராக இருந்த இவர் 2015ம் ஆண்டு முதல் இந்த பதவியில் உள்ளார். 2018ல் இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இளம் வயதிலேயே இப்பதவியை பெற்றது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் இவரது கணவரிடம் இருந்து தனக்கு விவகாரத்து கிடைத்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: சில நேரங்களில் சிறந்தவர்கள் ஒன்றாக இருக்க முடியாது. இது போன்ற வலியை சமாளிக்க எங்களுக்கும் எங்களைப் போன்ற மற்றவர்களுக்கும் பலம் அளிக்கும்படி கடவுளை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


latest tamil news

சுவாதி மாலிவாலின் கணவர் நவீன் ஜெய்ஹிந்த், ஆம் ஆத்மி கட்சியின் ஹரியானா பிரிவு தலைவராக இருந்துள்ளார்.கடந்த 2019-ல் ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். மேலும் பெண்கள் குறித்த 'மீ டூ' பற்றி நவீன் ஜெய்ஹிந்த் கூறிய கருத்திற்கு சுவாதி மாலிவால், கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X