பொது செய்தி

இந்தியா

கணவரை இழந்த ஓராண்டுக்குள் ராணுவத்தில் சேர்ந்தார்

Added : பிப் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கணவரை இழந்த ஓராண்டுக்குள் ராணுவத்தில் சேர்ந்தார்

டேராடூன் :பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழந்த ஓராண்டுக்குள், அவருடைய மனைவியும் கடும் சிரமத்திற்குப் பிறகு ராணுவ அதிகாரிக்கான பயிற்சியில் சேர உள்ளார்.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த, மேஜர் விபூதி டவுண்டியால், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு, பிப்., 17ல், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுடன் நடந்த, 20 மணி நேர சண்டையில் அவர் உயிரிழந்தார்.

அவருடன், மூன்று ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.அப்போது, 35 வயதான விபூதியின் உடல், டேராடூனுக்கு இறுதி மரியாதை செலுத்த கொண்டு வரப்பட்டது. திருமணமான, ஒன்பது மாதங்களில் கணவரை இழந்த சோகம் இருந்தபோதும், 'சல்யூட்' அடித்து மரியாதை செலுத்தி, கணவரின் காதருகே சென்று, 'ஐ லவ் யூ' என, அவருடைய இளம் மனைவி நிகிதா கவுல் கூறியபோது, அனைவரின் இதயமும் கசிந்தது.இது நடந்து, ஓராண்டாகியுள்ள நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில், கணவர் வழியில் நிகிதாவும் ராணுவத்தில் சேருகிறார்.குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரியாவதற்கான தேர்வை எழுதினார். ராணுவ அதிகாரியின் விதவை என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் அகாடமி யில், ஓராண்டு பயிற்சியில் சேர உள்ளார் நிகிதா.''ராணுவத்தில் இருந்தபோது, என் கணவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக கடந்த, ஓராண்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். ''என் கணவர் உடன் இருப்பதாக நான் உணர்கிறேன். அதுதான் எனக்கு பலத்தை, மனதிடத்தை அளிக்கிறது,'' என, நிகிதா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
20-பிப்-202010:05:31 IST Report Abuse
Nallappan Kannan Nallappan வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X