22வது சட்ட கமிஷன் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 22வது ,சட்ட கமிஷன், மத்திய அமைச்சரவை, ஒப்புதல்

புதுடில்லி:டில்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 22வது சட்ட கமிஷன் அமைக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், 22வது சட்ட கமிஷன் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 21வது சட்ட கமிஷனின் பதவிக்காலம், கடந்த ஆண்டு ஆகஸ்ட், 31ம் தேதியுடன் முடிந்தது.


நடவடிக்கை



மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, 22வது கமிஷனை, மத்திய சட்ட அமைச்சகம் அமைக்கும். இந்த கமிஷனின் பதவிக்காலம், மூன்று ஆண்டாக இருக்கும். இந்த கமிஷனில், ஒரு தலைவர், நான்கு முழு நேர உறுப்பினர்கள், ஐந்து பகுதி நேர உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்.ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தான், சட்ட கமிஷனின் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம்.

நாட்டில், 1955ல், முதல் சட்ட கமிஷன் அமைக்கப்பட்டது. அதன்பின், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிய சட்ட கமிஷன் அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்ககப்பட்ட மற்ற முடிவுகள் பற்றி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

பால் உற்பத்தியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பால் உற்பத்திக்காக வழங்கப்படும் வட்டிக்கான மானியத்தை, 2 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதமாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


50 ஆயிரம் கிராமங்கள்

இதன் மூலம், 50 ஆயிரம் கிராமங்களில் உள்ள, 95 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். விவசாயிகளிடம் எளிமையாக சேர, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.துாய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துஉள்ளது.


தேசிய அந்தஸ்து

இரண்டாம் கட்டத்தில், திரவ மற்றும் திடக் கழிவு மேலாண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இரண்டாம் கட்ட பணிகள், 2020 - 2025ம் ஆண்டு வரை அமல்படுத்தப்படும். குஜராத் மாநிலத்தில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'பைசாக்'கிற்கு, தேசிய அந்தஸ்து வழங்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
20-பிப்-202013:57:01 IST Report Abuse
S.VELMURUGAN இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் வீடுகளிலிருந்து வெளிவரும் சமையலறை கழிவு நீரால் கொசு உற்பத்தி அதிகமாகி மக்களுக்கு பலவகையான நோய்கள் உருவாகின்றன.மத்திய மாநில அரசுகள் தாங்களே இதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது இருந்தாலும் அவசர நடவடிக்கையாக குடிமக்கள் அனைவரும் தாங்களே கழிவுநீரை சாதாரண நீராக மாற்றுவதற்குரிய எளிய முறைகளை ஆலோசணைகளாக வழங்க வேண்டும்.கொசு உற்பத்தி இல்லாத, அதன்மூலம் நோய்இல்லாத அடிப்படை சுகாதாரம் நிறைந்த இந்தியாவை மக்களால் மக்களுக்காக உருவாக்க வேண்டும்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
20-பிப்-202013:11:31 IST Report Abuse
Suri பீ ஜெ பீ MLA MP க்கள் கற்பழிப்பு வழக்குகளில் அதிகம் சிக்குகிறார்கள், அதற்கு கூட ஒரு கமிஷன் அமையுங்கள்....ஒழுங்காக விசாரிக்க. இவர்களுக்கு என்ன குறை, எதற்கு இவர்கள் அதிகம் சிக்குகிறார்கள் என்று தீர விசாரித்து இவர்கள் "குறை" தீர்க்க ஒரு நல்ல வழி காண்பியுங்கள்.. உங்கள் கட்சி ஆட்களுக்கு.. குறிப்பாக MP மற்றும் MLA க்களுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X