அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலம் தனியாருக்கு இல்லை :முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 கோவில், நிலம், தனியாருக்கு, இல்லை,முதல்வர் இ.பி.எஸ்.,

''கோவில் நிலத்தை, தனியாருக்கு வழங்கவில்லை. அரசின் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:


காங்., - ராமசாமி:


திருட்டுகளை தடுக்க, அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.


முதல்வர்:


சென்னையில், 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், அனைத்து நகரங்களிலும், படிப்படியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. இது, குற்றாவாளிகளை கண்டுபிடிக்க, பெரிதும் உதவியாக உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதால், குற்றங்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.


ராமசாமி:கோவில் சொத்துகளை மீட்டுள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது; இது பாராட்டத்தக்கது. கோவில் நிலங்களை, வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்; அவ்வாறு செய்யக் கூடாது. சாமி வீட்டு சொத்து; கை வைக்காதீர்கள்.


முதல்வர்:கோவில் நிலங்களை, தனியாருக்கு வழங்கவில்லை. அரசின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்துகிறோம். அதுவும் எடுக்கப்படும் நிலத்திற்கு, சந்தை விலை மதிப்பை விட, பல மடங்கு கூடுதல் விலையை, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கிய பின்னரே, வாங்குகிறோம்.


ராமசாமி:


அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம், 'நீட்' தேர்வு போன்றவற்றில் தவறுகள் நடந்துள்ளன.


அமைச்சர் செங்கோட்டையன்:ஆசிரியர் தேர்வு வாரியத்தில், எந்த தவறும் நடக்கவில்லை. 'நீட்' தேர்வை, மத்திய அரசு நடத்துகிறது.


அமைச்சர் ஜெயகுமார்:டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, 6,300 மையங்களில் நடந்தது. இரண்டு மையங்களில், தவறு நடந்த தகவல் வந்ததும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள், எந்த கொம்பனாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.'


அம்மாவை மறந்துட்டீங்களா?'சட்டசபையில் நடந்த விவாதம்:காங்., - ராமசாமி: அம்மா உணவகத்தை, 2013ல், ஜெயலலிதா துவக்கி வைத்தார். அவை, தற்போது ஒழுங்காக நடக்கவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளால் நடத்த முடியவில்லை. பல இடங்களில் மூடப்பட்டுள்ளன.
அம்மாவை நீங்கள் மறந்து விட்டீர்களா?
அமைச்சர் வேலுமணி:

உயிர் உள்ளவரை, அம்மாவை மறக்க மாட்டோம். 'அம்மா உணவகம்' நிறுத்தப்படவில்லை. நகராட்சிகளில் நிதி ஒதுக்குவதில், சில பிரச்னைகள் உள்ளன. அதற்காக முதல்வர், 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.அம்மா உணவகத்திற்கு நிதி பெற, தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.


ஓ.பி.எஸ்., பேச்சால் சிரிப்பலை!சட்டசபையில், காங்., தலைவர் ராமசாமி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் நடந்த முறைகேடு குறித்து பேசினார். அப்போது, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு, ''காங்கிரஸ் கட்சியினரிடம், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்குக்கு வழி சொல்வர் என, அண்ணாதுரை கூறியது, தற்போது நினைக்கு வருகிறது,'' என்றார்.

உடனே ராமசாமி, ''நீங்கள் எப்படி பேசினாலும், எங்களை திசை திருப்ப முடியாது,'' என்றார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், ''உண்மைதான்... காங்கிரசை திசை திருப்பவே முடியாது. 1967ல் இருந்து, அவர்கள் திசை திரும்பவில்லை,'' எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
20-பிப்-202021:34:14 IST Report Abuse
Sivagiri -பணம் கொடுத்து வாங்குகிறீர்களா ?? அந்த பணம் எங்கிருந்து வந்தது ? ? ? .. . உண்டியல் வசூலை எடுத்து அந்த சாமியிடமே கொடுத்து - சாமி இடத்தை எழுதி வாங்குகிறீர்களா ? ? ? . . . சூப்பர் . . . இதுக்கு பேர்தான் ஆட்டைய போடுறது-ம்பாய்ங்க . . .
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-பிப்-202007:18:35 IST Report Abuse
elakkumanan சார், எடப்பாடி சார்,.................இப்படி தப்பும் தவறுமா பேசிப்புடுறீங்க......................அப்பொறம்,எங்க தலை, அடிப்படை அறிவு உங்ககிட்டயே கடன் கேக்குறார்.............................கோயில் நிலம் தனியாருக்கு இல்லை என்றால், இது த்ராவிடலாசின் பகுத்தறிவு தத்துவத்திற்கு நேரெதிர்...............................அப்பொறம் எப்புடி, டீம்கா ஆதரிக்கும் சார்...............................கொள்கை பிடிப்பு முக்கியம் சார்...................நீங்க இப்பிடியே, த்ராவிடால்ஸ் தத்துவங்களையெல்லாம் குழிக்குள்ள புதைச்சுட்டா, சொரியார் மற்றும் கட்டை ஆவி உங்களை மன்னிக்காது சார் (இந்த ஆவி பகுத்தறிவு ஆவி....இந்த இட்லி வேகவைக்கிறோம்ல , அந்த ஆவி )........................ டீம்காவுக்கு எதிரான நிலையெடுத்து, டீம்காவை அழிக்க நினைக்கும் உங்கள் உள்நோக்கம் புரிகிறது சார்..............ஆனால், டீம்கா, நெருப்பாற்றில் நீச்சலடித்து கருப்பு தண்ணியில் குளித்த த்ராவிடஅல்ஸின் நிறம் கொண்ட ஜாமீனர்களின் இயக்கம் சார்..................கோர்ட் அனுமதியோடு வாழும் நெறய பேர் இருக்கும் கட்சி சார் டீம்காவும் காண் கிராஸ் உம்.......(ஜாமீனைத்தான் சொல்றேன் ) சட்டப்படி ன்னா அர்த்தம் தெரியுமா சார்.................................
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-பிப்-202003:34:01 IST Report Abuse
J.V. Iyer "பல மடங்கு கூடுதல் விலையை, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கிய பின்னரே, வாங்குகிறோம்." கோவில் சொத்தை யாருக்கு விற்கிறீர்கள்?? பாவம். அடுத்த தேர்தலில் இது தெரியும். பாவம் செய்தவர்கள் மண்ணை கவ்வுவார்கள்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
20-பிப்-202008:05:33 IST Report Abuse
Darmavanஇது ஒரு ஏமாற்று வேலை. அறநிலையத்துறை கோயில் சொத்துக்கு சொந்தக்காரனல்ல.. கோயிலில் உள்ள கடவுளே சொந்தக்காரர்.இவர் அறநிலைய துறைக்கு பவ்ர் ஆப் அட்டர்னி கொடுக்கவில்லை....
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
20-பிப்-202011:18:35 IST Report Abuse
Srinivas///கோவில் சொத்தை யாருக்கு விற்கிறீர்கள்?? பாவம். அடுத்த தேர்தலில் இது தெரியும். பாவம் செய்தவர்கள் மண்ணை கவ்வுவார்கள்./// இப்போது தெரிகிறதா? இந்துக்களுக்கு யார் ஆதரவாக இருப்பது என்று? இங்கே வெற்று ஊளையிடும் பல ஆளும் கட்சி அடிவருடிகள் இந்த விஷயத்தைப்பற்றி கருத்து தெரிவிப்பது இல்லை. பிஜேபிக்கு இதில் பங்கு போகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு பல நாட்களாக உண்டு. அடிமைகள் இந்து கோயில்களின் சிலைகள், வருமானம், சொத்து அனைத்தையும் சூறையாடுகின்றனர். தன் கட்சி அடிமைகளை இந்து அறநிலையத்துறையின் நியமித்து பல வருடங்களாக ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்டுகிறது. கோயில் நிலத்தை இலவச பட்டா போட்டுக்கொடுக்க சமீபத்தில் அரசாணை ஒன்று அடிமை அரசால் வெளியிடப்பட்டது. கோயில் நிலம் யார் சொத்து? யார் இலவச பட்டா போடுவது? பல நூறு நலிவடைந்த கோயில்கள் தமிழகத்தில் உண்டு. அவற்றை புதுப்பித்து தினம் தினம் பூஜைகள் நடக்க பல தன்னார்வலர்கள் முயற்சி செய்கின்றனர். அதிலெல்லாம் இந்து அறநிலையத்துறையின் கவனம் செல்கிறதா? இல்லை. கொள்ளை,சூறையாடல் மட்டுமே நடக்கிறது. இந்துக்கள், இந்துக்கள் என்று போலி வேஷம் போட ஓட்டுபொறுக்கும் கட்சிக்காக இங்கே கூவ பல அடிமைகள் உள்ளனர். ஆனால் இந்துக்கள் என்ற உண்மையான எண்ணத்துடன் யாரும் கருத்து தெரிவிப்பது இல்லை. ஏன் சர்ச், மசூதியின் சொத்துக்களை இலவச பட்டா போட அரசாணை வெளியிடவேண்டியதுதானே? இந்துக்களின் கோயில் சொத்துக்கள் அடிமை கொள்ளையர்களுக்கு இளக்காரமாகப்போய்விட்டது. ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க முடியாது என்ற ஆணவப்போக்கு அடிமைகளுக்கு உள்ளது. இறைவன் அருளால் இவற்றிற்கு ஒரு முடிவு வரவேண்டும்....
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
20-பிப்-202011:25:19 IST Report Abuse
Srinivas///"பல மடங்கு கூடுதல் விலையை, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கிய பின்னரே, வாங்குகிறோம்."/// இதில் ஒரு பங்குகூட கோயிலுக்கு சென்று சேர்ந்திருக்காது. மேலிருந்து கீழ்வரை உள்ள அடிமைகளால் பங்குபோடப்பட்டு பொய்கணக்கு எழுதிவைக்கப்படும் என்பதுதான் உண்மை. ''இந்துக்களே'' ''இந்து சொந்தங்களே'' என்று கூவும் அடிமை அரசின் கைக்கூலிகள் இங்கே வந்து கருத்து தெரிவிக்கலாம்...யார் இந்துக்களின் உண்மையான விரோதி என்று. அவன் இறைவன் வழிபாட்டை கேலி செய்தான் இங்கே உள்ள அடிமைகள் கோயிலையே சூறையாடுகின்றன...இதுதான் உண்மை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X