பொது செய்தி

இந்தியா

இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
SubramanianSwamy, BJP, SuperPower, India, GST, பாஜ, பாஜக, பாரதீய ஜனதா, சுப்பிரமணியன் சுவாமி, வல்லரசு, இந்தியா, ஜிஎஸ்டி

ஐதராபாத்: 2030ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு, பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 10 சதவீதமாக வளர வேண்டும் என பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் 'இந்தியா - 2030 க்குள் ஒரு பொருளாதார வல்லரசு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற, பாஜ., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி, பேசியதாவது: முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதம் பெற்றும், சீர்திருத்தங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்தியா தற்போது தேவைப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது. மக்கள் கையில் செலவு செய்ய பணமில்லை.


latest tamil news


அடுத்த 10 ஆண்டுக்கு பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் இருந்தால் தான் இந்தியா 2030ம் ஆண்டில் பொருளாதாரத்தில் வல்லரசாக முடியும். இப்போது இருப்பது போன்ற வளர்ச்சியில் சென்றால், 50 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அமெரிக்கா, சீனாவுக்கு நம்மால் சவால் கொடுக்க முடியும். வருமானவரி மூலம் முதலீட்டாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்க கூடாது. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி.,யை கொண்டு வந்தது தான். இதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai Hinth - chennai,இந்தியா
26-பிப்-202012:41:09 IST Report Abuse
Jai Hinth எல்லாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி சம்பாதிக்க சொல்லுங்கள் . முக்கியமாக அரேபியா நாட்டிற்கு அனுப்பினால் அதிக சம்பளம் கொடுப்பார்கள் . இப்பவும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது , அதனால் தான் அரசியல் தலைவர்கள் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
easwaran.s - tiruvallur,இந்தியா
24-பிப்-202011:46:37 IST Report Abuse
easwaran.s முதலில் தன்னிறைவு அடைந்தபின் ஏற்றுமதி செய்யவும் அதற்கே வழி இல்ல
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-பிப்-202021:36:19 IST Report Abuse
Sampath Kumar பத்து சதவிகிதம் வளர்ச்சிக்கு நீங்கள் ஏதாவது யோசனை சொல்லுங்கள் பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X