கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் இருக்கு: வருமான வரித்துறை

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020
Share
Advertisement
சசிகலா, பினாமி, பரிவர்த்தனை, வருமானவரித்துறை, சென்னை, ஐகோர்ட், விளக்கம்

சென்னை: சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது.

புதுச்சேரியில் நகைக்கடை நடத்திவந்த நவீன் பாலாஜியின் ரிசார்ட்டை சசிகலா தரப்பில் அவரது பிரதிநிதிகள் கடந்த 2016ல் வாங்க முயற்சித்தனர். அப்போது பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ.148 கோடி கொடுத்துள்ளனர்.
ஆனால், மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகள் என்பதால் இந்த பரிவர்த்தனையை ரத்து செய்துவிட்ட நிலையில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி பணத்தை முடக்கி, பினாமி பரிவர்த்தனை என தெரிவித்ததாகவும் சென்னை ஐகோர்ட்டில் நவீன் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news


இந்த வழக்கு தொடர்பாக வருமானவரித்துறை சார்பில் இன்று (பிப்.,19) விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. நவீன் பாலாஜியின் குடும்பத்திற்கும், சசிகலாவுக்கு இடையே ரிசார்ட் விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ரிசார்ட்டின் பங்குகள் சசிகலாவின் பெயருக்கோ, அவர் பிரதிநிதிகளின் பெயருக்கோ மாற்றம் செய்யவில்லை. பங்குகளின் உண்மை உரிமையாளரை மறைக்கும் வகையில் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. ரூ.148 கோடியை முடக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன் மனுதாரருக்கு போதிய வாய்ப்பு தரப்பட்டது. இவ்வாறு வருமானவரித்துறை விளக்கமளித்தது. இதனையடுத்து இந்த வழக்கை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X