சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (7+ 52)
Share
Advertisement
kamal,Indian2,accident,நடிகர், கமல், படப்பிடிப்பு, விபத்து, 6 பேர், பலி

சென்னை :நடிகர் கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'கிரேன்' அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பலியாகினர்.

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும், இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.


latest tamil newsபடத்தின் பாடல் காட்சிக்காக, பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள், நேற்று மாலை முதல் நடந்து வந்தன. அப்போது, ராட்சத 'கிரேன்' ஒன்று, அறுந்து விழுந்ததில், ஒரு உதவி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இருவர் உட்பட, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.


latest tamil newsஅவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜயின் பிகில் படத்தின் படப்பிடிப்பின்போதும், விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கமல் அனுதாபம்


இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ‛மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்‛ என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7+ 52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
20-பிப்-202014:10:59 IST Report Abuse
Subramanian Arunachalam மோடி அரசின் மக்கள் விரோத செயல்களால் இந்த விபத்து ஏற்பட்டது . மோடி அரசின் ஆர்டிகிள் 370 ஒழிப்பு மற்றும் குடியுரிமை சட்ட திருத்தமே இந்த விபத்திற்கு காரணம் என்று தொலை காட்சி ஊடகங்களுக்கு விரிவாக விளக்குவார் உலக நாயகன்
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-பிப்-202010:00:01 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த விபத்திற்கு காரணமான கமலஹாசனும் சங்கரும், அந்த தயாரிப்பாளரும் எப்போது கைது செய்யப்படுவார்கள்.......
Rate this:
Cancel
20-பிப்-202008:28:17 IST Report Abuse
chandran சுபசிரி உயிரும் இங்கே விபத்தில் இறந்த உயிர்களும் ஒன்று தான். இரண்டும் விபத்து தான். ஆனால் அப்போது மட்டும் கமல் முதல் நீதிமன்றம் வரை குதியோ குதி என குதித்தது ஏன் என்று தெரிவில்லை. கமல் இறந்தவர்கள் குடும்பத்துக்கு கடைசிவரை கஞ்சி ஊத்துவாரா. ஆறுதல் மட்டுமே என்றால் அவர் இரக்கமற்றவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X