சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில், இரைச்சல் நிறைந்த பெருநகரங்களில், சென்னை முதலிடம் பிடித்துள்ளது என, ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பது, கவலை அளிக்கிறது. இதற்கு, வாகனங்களின் இரைச்சல் தான் முக்கிய காரணம். அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பானை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: கண்ணாடி ஏற்றிய, 'ஏசி' கார் களில், நம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பறப்பதால், வாகனங்களின், 'ஹாரன்' ஒலி அவர்களுக்கு கேட்டிருக்க நியாயமில்லை. நீங்களும் அப்படித் தான் இருப்பீர்களோ என்ற, 'டவுட்' இருந்த நிலையில், இரைச்சலை தவிர்க்க குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கதே. சமீபத்தில், ஒரு அமெரிக்கர், 'சென்னையில், மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. ஒன்று, ஆங்கிலம், மற்றொன்று தமிழ், மூன்றாவது, வாகனங்களின் ஹாரன்' என, குறிப்பிட்டிருந்ததை படித்திருப்பீர்களோ என்ற டவுட்டும் ஏற்படுகிறது.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ., அபுபக்கர்: கடையநல்லுாரில், 600 ஆண்டுகள் பழமையான, கடகாலீஸ்வரர் உடனுறை கரும்பால் மொழியம்மை கோவிலை சீரமைக்க வேண்டும். 2022ல் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்; இன்னும் அதற்கான பணிகளை துவக்காமல், அறநிலையத்துறை அலட்சியமாக உள்ளது.

'டவுட்' தனபாலு: சட்டசபையில், கடையநல்லுார் தொகுதி, எம்.எல்.ஏ., அபுபக்கர் பேசியது, பெருந்தன்மை, மதச்சார்பற்ற தன்மை, சமூக நல்லிணக்கத்திற்கான முன்னுதாரணம் என்பது, தமிழக மக்களுக்கு, 'டவுட்' இல்லாமல் புரிந்திருக்கும். இதுபோல, பிற மதங்களை மதிக்கும் மாண்பு, தமிழகத்தில் சமீபத்தில் காணாமல் போயிருந்தது; குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்திற்கு பின் வந்துள்ளதோ என்ற டவுட்டும் ஏற்படுகிறது.


ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: தமிழகத்தில், கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில், குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக, பல நுாறு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். ஒலிபெருக்கி பயன்படுத்துவதில், போலீஸ் விதிமுறைகள் கெடுபிடிகளாக உள்ளன. எனவே, ஒலிபெருக்கி பயன்படுத்திக் கொள்ளும் நேரத்தை, இரவு, 10:00 மணி வரை என்பதை, அதிகாலை, 2:00 மணி வரை என, மாற்ற வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஹிந்துக்களின் வழிபாடுகளை, 'சாத்தான்களின் வழிபாடு' என வர்ணிக்கும், துாத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி ஜெப கூட்ட அமைப்பாளர்களை ஆதரிப்பவர்களில் முதன்மையானவரான நீங்கள், குலதெய்வ வழிபாடு பற்றி பேசுவது, பல, 'டவுட்'டுகளை கிளப்புகிறது. எப்படியோ, தி.மு.க.,வுக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது போல, ம.தி.மு.க.,வுக்கும் ஏற்பட்டுள்ளதோ என்ற டவுட்டும் கிளம்புது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-பிப்-202018:05:19 IST Report Abuse
கல்யாணராமன் சு. வைகோ மனமாற்றமெல்லாம் பிரசாந்த் கிஷோர் வேலையா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-பிப்-202006:14:08 IST Report Abuse
D.Ambujavalli இந்த மாசி- பங்குனியில் தான் பள்ளிகளில் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் என்று மாணவர்கள் படிப்பார்கள் அவர்கள் சற்றாவது ஓய்வெடுக்க விடாது இடையூறாக இரண்டுமணி வரை ஒலி பெருக்கிகள் கூப்பாடு போடவேண்டுமென்று இவர் பரிந்துரைக்கிறார் மாணவர்கள், முதியோர் குழந்தைகள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என நினைத்துப் பார்க்க மாட்டாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X