மதுரை; மதுரை மாநகராட்சி வளாகத்தில் படிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு இலவச வைபை வசதி வழங்கப்படவுள்ளது.
மரங்கள் அடர்ந்த இவ்வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர், இளம்பெண்கள் குழுவாக அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயாராகின்றனர். படிப்பதற்கேற்ற சூழல் இருப்பதால் பக்கத்து மாவட்டத்தினரும் அதிகாலை முதல் இரவு வரை படிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம், இரவில் படிக்க விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை துவங்க இருப்பதால் நிழற்குடையும் வழங்கப்படுகிறது.
தற்போது 4ஜி வேக இலவச வைபை வசதி செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ACT FIBERNET நிறுவனம் இப்பொறுப்பை ஏற்றுள்ளது. சில நாட்களில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். தினமும் 45 நிமிடங்கள் இலவச வைபை வசதி பெற முடியும்.கமிஷனர் விசாகன் கூறுகையில், ''மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் தினமும் 2000 பேர் பயன்பெறுவர். 2வது கட்டமாக வண்டியூர் உள்ளிட்ட பூங்காகளில் இவ்வசதி செய்யப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE