தேச விரோத செயல்களில் ஈடுபட்டால் மரணம் தான்: ஆதித்யநாத்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
YogiAdityanath,CAA,CAA_violence,UttarPradesh,CM,யோகி,சிஏஏ,யோகி_ஆதித்யநாத்

லக்னோ: தேச விரோத செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும், மரணத்தை சந்திக்க நேரிடும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி., சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தை, நிறைவு செய்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் உயிர் இழந்தவர்கள், போலீஸ் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகவில்லை. போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் சக போராட்டக்காரர்கள் உயிர் இழந்தனர்.


latest tamil news



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மிகப்பெரும் சதி நடந்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத அமைப்புகள் நிதி உதவி அளித்துள்ளன. மக்களை கொல்லும் நோக்கத்தில், தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினால், ஒன்று அவர் இறக்க வேண்டும் அல்லது போலீஸ் இறக்க வேண்டும். இப்போரட்டத்தில் சாதுர்யமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டுக்கள். உ.பி.,யில் எனது ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
20-பிப்-202016:29:03 IST Report Abuse
Ravi அருமையான , ஜெயலலிதா போன்ற தீர்க்கமான முடிவெடுப்பதில் வல்லமை பெற்ற முதல் அமைச்சர் , ஒரு லீடெர்ஷிப்க்கு என்ன தகுதி வேண்டுமோ அது சரியாக இவரிடம் இருக்கிறது .
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
20-பிப்-202016:12:33 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பாரத பொருளாதாரத்தை சவ குழிக்கு அனுப்பியதும் தேச துரோகம் தான் ராஜா..........
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
20-பிப்-202016:10:10 IST Report Abuse
chakra திறமையற்ற ஆட்சி புரியும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் தங்களுக்கு என்ன தண்டனை போகியார் அவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X