பொது செய்தி

இந்தியா

கணவரை இழந்த ஓராண்டுக்குள் ராணுவத்தில் இணைந்த வீரமங்கை

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
IndianArmy,Nikita,SSC,Army,ராணுவம்,வீரமங்கை

இந்த செய்தியை கேட்க

டேராடூன்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழந்த ஓராண்டுக்குள், அவருடைய மனைவியும் கடும் சிரமத்திற்குப் பிறகு ராணுவ அதிகாரிக்கான பயிற்சியில் சேர உள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த, மேஜர் விபூதி டவுண்டியால், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு, பிப்., 17ல், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுடன் நடந்த, 20 மணி நேர சண்டையில் அவர் உயிரிழந்தார். அவருடன், மூன்று ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.


latest tamil newsஅப்போது, 35 வயதான விபூதியின் உடல், டேராடூனுக்கு இறுதி மரியாதை செலுத்த கொண்டு வரப்பட்டது. திருமணமான, ஒன்பது மாதங்களில் கணவரை இழந்த சோகம் இருந்தபோதும், 'சல்யூட்' அடித்து மரியாதை செலுத்தி, கணவரின் காதருகே சென்று, 'ஐ லவ் யூ' என, அவருடைய இளம் மனைவி நிகிதா கவுல் கூறியபோது, அனைவரின் இதயமும் கசிந்தது.


latest tamil newsஇது நடந்து, ஓராண்டாகியுள்ள நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில், கணவர் வழியில் நிகிதாவும் ராணுவத்தில் சேருகிறார். குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரியாவதற்கான தேர்வை எழுதினார். ராணுவ அதிகாரியின் விதவை என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் அகாடமி யில், ஓராண்டு பயிற்சியில் சேர உள்ளார் நிகிதா. ''ராணுவத்தில் இருந்தபோது, என் கணவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக கடந்த, ஓராண்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். ''என் கணவர் உடன் இருப்பதாக நான் உணர்கிறேன். அதுதான் எனக்கு பலத்தை, மனதிடத்தை அளிக்கிறது,'' என, நிகிதா கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar - Madurai,இந்தியா
21-பிப்-202012:13:52 IST Report Abuse
Sankar இப்படியும் சிலர், என் போன்றவர்கள் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது எல்லாம் வல்ல ஈசன் தங்களுக்கு அனைத்து நன்மைகளையும் அருள வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
20-பிப்-202020:16:58 IST Report Abuse
Vijay D Ratnam வாழ்த்துக்கள் சகோதரி நிகிதா கவுல். சென்ற ஆண்டு இந்த தேசத்தை நாசமாக்க துடிக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலால் உன் கணவன் வீர மரணமடைந்த உன்னை பார்த்து நாடே சோகத்தில் ஆழ்ந்தது. இன்று உன்னை பார்த்து நாடே பெருமை கொள்கிறது. பெண்களின் ரோல் மாடல் ஆகியிருக்கிறாய். இனி உன் வாழ்க்கையில் தோல்வி, இழப்பு என்பதே வராது. வெற்றி மட்டுமே. ஜெய்ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
20-பிப்-202017:34:53 IST Report Abuse
r.sundaram மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அம்மணி. உங்களின் இந்த முடிவுக்கு உலகத்தில் வேறு எதுவும் ஈடாகாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X