பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சியா? தண்டனையை தள்ளிப் போட முயற்சியா?

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக் கொண்டதால் காயம் ஏற்பட்டுள்ளது.latest tamil news


நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை ரத்து செய்யவும், தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பலமுறை முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது வினய் சர்மா, சுவரில் தனது தலையை மோதியதால், காயம் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.


latest tamil news


இதற்கு முன் சிறையில் உள்ள கிரிலில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பிப்.,16 ம் தேதி நடந்ததாகவும், இது பற்றி வினய்யின் தாய் கேட்ட போதும், அவர் அதை கண்டு கொள்ளவில்லை எனவும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவரத மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.


latest tamil news


ஆனால் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய தேதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளனர். உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். பெற்றோர்களை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும், சில சமயங்களில் அவர்களை சந்திக்கவும் குற்றவாளிகள் மறுத்து விடுவதாகவும் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூர்க்கதனமாக நடந்து கொள்வதும், தங்களை காயப்படுத்தி கொள்வதும் சகஜம் தான் என வழக்கம் தான் என கூறப்படுகிறது. ஒருவேளை குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, எடை குறைந்தாலோ அவர்கள் உடல்நலம் தேறும் வரை தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகும் என சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வினய் சர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா, முரட்டுத்தனமாக தன்னை தானே காயப்படுத்திக் கொண்டாரா அல்லது தண்டனையை தள்ளிப் போடுவதற்காக இவ்வாறு செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


கோர்ட்டில் மனு

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க திஹார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தனக்குதலையில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கையில் முணுறிவு ஏற்பட்டுள்ளது. மன நிலை சரியாக இல்லை. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
20-பிப்-202018:21:57 IST Report Abuse
jagan யார் இவனுக்கு இந்த மாதிரி ஐடியா குடுக்கிறது? அவனை போடணும்
Rate this:
Cancel
Mango Mani - Bangalore,இந்தியா
20-பிப்-202017:44:20 IST Report Abuse
Mango Mani தயவு செஞ்சு ஒரு நாள் மாத்திரம் ஆந்திரா சிறைக்கு மாத்துங்க...போதும்..
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-202015:52:58 IST Report Abuse
Yaro Oruvan தமிழ்நாட்டில் அம்மா ஆட்சியில் ஒருவன் வயரை கடித்து செத்தான்.. கண்டவனும் கூவுனானுவ - நாலு நாளைக்கி. அப்புறம் கப் சிப்.. டெல்லி சிறையில் வயர் இருக்கிறது.. அம்மா இல்லை அதுதான் வித்தியாசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X