அரசு ஒப்புக் கொள்ளாத வரை பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது : மன்மோகன் சிங்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (87+ 33)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பொருளாதார மந்த நிலையை அரசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது. அதனால் அதை சரி செய்ய முடியாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.latest tamil news


மான்டேக் சிங் அலுவாலியாவின் "Backstage" புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முன்னாள் திட்டக்குழு துணை தலைவர் தனது புத்தகத்தில் காங்., அரசின் பலவீனங்கள் குறித்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் தற்போதைய அரசு பொருளாதார மந்த நிலை குறித்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது நமது நாட்டிற்கு நல்லதல்ல. பிரச்னையை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத வரை தீர்வு காண முடியாது. நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை சரி செய்வதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவோ, நம்பகமான பதில்களை உங்களால் பெறவோ முடியாது. இது தான் உண்மையில் ஆபத்து.


latest tamil news


இந்த புத்தகம் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகச் சிறந்த வகையில் துணை நிற்கும். ஆளும் கட்சியினர் இன்று கூறி வருவதற்கு நேர் எதிராக மான்டேக் குறிப்பிட்டுள்ளார். 2024-25 க்குள் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என்பது போற்றத்தக்க சிந்தனை. 3 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காகும் என எந்த காரணத்திற்காகவும் எதிர்பார்க்க முடியாது. 1990 களில் நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் காணப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், ப.சிதம்பரம், அலுவாலியாக ஆகியோரின் முக்கிய பங்களிப்பே காரணம். ஒவ்வொரு காலாண்டிலும் சீர்திருத்தம் செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (87+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-பிப்-202017:22:59 IST Report Abuse
Endrum Indian பப்பு தி கிரேட் முஸ்லீம் நேரு காங்கிரஸ் (வேறு யாரும் இவ்வளவு கீழான தகுதிகள் இல்லாததினால்) மீண்டும் தலைவராவதற்கு முன் பட்டாயா சென்று உல்லாசமாக இருந்து விட்டு பிறகு பக்கத்து நாடுகளில் சென்று தாங்கள் போட்ட ரூ 92 லட்சம் கோடி முதல் எப்படி இருக்கின்றது என்று ஒரு தடவை பார்த்து விட்டு.... என்ன பப்பு நான் சொல்வது சரிதானே
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
21-பிப்-202001:14:42 IST Report Abuse
Aarkay பப்பு பட்டாயா சென்றுவிட்டார் போலும் அவர் விட்டுச்சென்ற வேலையை மண்ணு செய்யுது
Rate this:
Cancel
20-பிப்-202020:22:41 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Srinivasan Chennai, did you link the bank account to receive the Manyam? And to remind you, this intellectual and his scam master PC are the one gave the pricing authority to.the oil companies. Dont be slave to Italian mafia
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X