பொது செய்தி

இந்தியா

அவிநாசி விபத்து: களமிறங்கும் கேரள அரசு

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

திருவனந்தபுரம் : அவிநாசி சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.latest tamil newsதிருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள அரசு சொகுசு பஸ்சும், கோவையில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் கன்டெய்னர் டிரைவர் தப்பி ஓடி விட்டார். கேரள அரசு பஸ்சில் வந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 23 பேர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்து தரும்படி பாலக்காடு மாவட்ட கலெக்டரை முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தி உள்ளார். தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டருடன் இணைந்து அனைத்து விதமான நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது பற்றி கேரள போக்குவரத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறுகையில், கேரள போக்குவரத்துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கேரள போக்குவரத்துறை நிர்வாக இயக்குனர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்வார் என தெரிவித்துள்ளார். அமைச்சர் சசீந்திரன் மற்றும் வி.எஸ்.சுனில் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை நிர்வகிப்பார்கள் என கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


ஒரே நாளில் பிரேத பரிசோதனை


விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர், கேரள மாநிலம் பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: உயிரிழந்த 19 பேரின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 4 பேரின் உறவினர்கள் திருப்பூர் வந்துவிட்டனர். மற்றவர்கள் வந்து கொண்டுள்ளனர். ஒரே நாளில், அனைவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் குறித்து கேரள அரசிடம் பேசி அறிவிக்கப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naju -  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-202016:43:26 IST Report Abuse
Naju ore theervu makkal iravu nera perunthu payanangalai thavirpathu than,helmet check panra,namma alungala Kanome,intha lorry driver thanni adichurukkananu parka
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-202015:26:07 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி நெடுஞ்சாலைகளில் விதிகளை மதிப்பதில் தமிழக டிரைவர்கள் எதிர் கட்சித்தலைவரைப் போல் தான் செயல் படுகின்றனர். சுத்த மோசம்...
Rate this:
Share this comment
Nethiadi - Thiruvarur,இந்தியா
27-பிப்-202015:59:41 IST Report Abuse
Nethiadiநாஞ்சில் கண்டைனர் வண்டி ஓடியவரும் கேரளாவை சேர்ந்தவரே....
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
20-பிப்-202012:52:27 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் தேசிய நெடுஞ்சாலை உட்பட சாலை விதிகளை அனைத்து வாகன ஓட்டிகளுக்கு புரியவைக்கவேண்டும். எந்த சைகையும் இல்லாமல் ரோட்டில் வாகனத்தை நிறுத்துவது, எதிர் திசையில் வருவது என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நிலை மாறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X