பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை அதிர வைத்த 3 விபத்துகள்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சென்னை: நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த 3 விபத்துகள் தமிழகத்தை அதிர வைத்துள்ளன.



latest tamil news


சென்னையில் நேற்று இரவு, கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் உதவி இயக்குனரும், பிரபல கார்டுனிஸ்ட் மதனின் மருமகனுமான கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் காயமடைந்தனர்.

இன்று (பிப்.,20) அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரள அரசு சொகுசு பஸ், கன்டெய்னர் லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து நடந்த சிறிது நேரத்தில் சேலம் ஓமலூரில் நேபாள பயணிகள் வந்த பஸ்சும், வேனும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.


latest tamil news



குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கன்டெய்னர் லாரி டிரைவர் கண் அயர்ந்ததே அவிநாசி கோர விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. அதிகாலையில் இது போன்ற கோர விபத்துக்கள் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. டிரைவர்கள் போதிய ஓய்வின்றி தொடர்ந்து பணியில் ஈடுபடுவதே இது போன்ற விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.



Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
20-பிப்-202023:08:25 IST Report Abuse
Vena Suna பாவிங்க...ஒழுங்கா ஓய்வு எடுத்து ஓட்ட வேண்டும்..காட்டு ஸ்பீட்ல போறானுங்க...
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-202018:56:46 IST Report Abuse
Tamilan தற்போது கூட குஜராத் , UP என பல வட மாநிலங்களிலும் நடந்தது .
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
20-பிப்-202017:08:32 IST Report Abuse
r.sundaram உலகமயமாக்கல் தொடங்கியதில் இருந்தே தொழிலாளர்கள் கசக்கி பிழியப்படுகிறார்கள். அதிக நேரம் வேலை, ஓய்வு கிடையாது, லீவு கிடைப்பதில் சிரமம், ஓவர் டைம் வேலைசெய்தாலும் சம்பளம் கிடையாது என்பன போன்ற தொழிலாளர்கள் விரோத போக்கே நாட்டில் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ஓட்டுனர்களை பொறுத்தவரை ஒருத்தரையே தொடர்ந்து அடுத்த டூட்டி பார்க்க சொல்வது மிகவும் அதிகமாக உள்ளது. அதனாலேயே விபத்துகள் அதிகரிக்கின்றன. தொழிலாளர் விரோத போக்கு என்பது எந்த துறை என்று இல்லாமல் எல்லா துறையிலேயும் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X