சீனாவில் குறைய துவங்கியது கொரோனா

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

பீஜிங் : சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாள் ஒன்றிற்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.



latest tamil news


சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இதுவரை 27 நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரசிற்கு சீனாவில் மட்டும் இதுவரை 2118 பேர் பலியாகி உள்ளனர். 74,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றிற்கு 1693 பேர் வரை புதிதாக பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதால் 349 புதிய நோயாளிகள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. நாள் ஒன்றிற்கு 132 ஆக இருந்து வந்த பலி எண்ணிக்கை, தற்போது 108 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக நோயால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஹூபியில் கொரோனா பரவுவதை பெரிய அளவில் குறைந்துள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் 2 பேரும், ஜப்பானின் டைமண்ட் பிரின்செஸ் கப்பலில் 2 பேரும் உயிரிந்துள்ளனர். தென் கொரியாவில் ஏற்கனவே 82 பேர் பலியாகி உள்ள நிலையில் 31 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
21-பிப்-202001:51:52 IST Report Abuse
Girija சீனா சொல்லுவதை நம்பணுமா டிக்கெட் வாங்கித்தரேன் சுற்றுலா போய்ட்டுவரீங்களா? எங்க திரும்பி வர்றது ? அம்பேல் தான் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் இதை ஒழிக்க. சீனாவின் தீவினை அதையே சுட்டு எரிக்கும் , பொருளாதாரம் தலைகுப்புற கவிழும் . அப்துல் கலாம் தீர்க்கதரிசி , இந்திய 2021 இல் வல்லரசாகும் என்றார் உண்மைதான்.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Coimbatore,இந்தியா
20-பிப்-202021:02:44 IST Report Abuse
Rajesh தென்கொரியாவில் ஒருவர் பலி. 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Coimbatore,இந்தியா
20-பிப்-202021:00:29 IST Report Abuse
Rajesh சிலர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X