கொரோனா பாதிப்பு; ஜப்பான் கப்பலில் இருவர் உயிரிழப்பு

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

டோக்கியோ: ஹாங்காங் நகரத்தில் இருந்து, கடந்த வாரம் 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல் ஜப்பான் வந்தது. இந்த கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் ஆறு பயணிகள், 132 பணியாளர்கள் என, மொத்தம், 138 இந்தியர்கள் உள்ளனர்.


latest tamil news


'கோவிட்-19' எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரசால் பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, சந்தேகித்தனர். இதையடுத்து, கப்பலில் உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதில், 500க்கும் மேற்பட்டவர்கள் வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களை கப்பலில் இருந்து வெளியேற்றி, மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.



latest tamil news


இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த இருவர் உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்த இருவரும், 80 வயதை நெருங்கிய முதியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
20-பிப்-202018:39:01 IST Report Abuse
Thirumal Kumaresan இந்த விஷயத்தில் உலக மனித சமுதாயம் தவறிழைப்பதாகவே நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
20-பிப்-202013:56:16 IST Report Abuse
Pannadai Pandian மதன்….ஏன் இந்த ஜி ஜி சிவாவை விவாதத்துக்கு கூப்பிடுகிறீர்கள் ??? இவன் பேசுற தமிழே கொச்சை. எந்த வித விவாதத்திலும் இவர் ஆதார பூர்வாமான கருத்தை வெளியிடுவதே இல்லை ஒரே கத்தல் தான்….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X