பொது செய்தி

தமிழ்நாடு

பெண் பயணிகளுடன் ‛கடலைபோட' பஸ் டிரைவர்களுக்கு தடை

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
Coimbatore, Bus, Driver, GovtBus, FrontSeat, Ladies, Transport Corporation, கோவை, பேருந்து, பஸ், முன்சீட்டு, பெண்கள், டிரைவர்கள், ஓட்டுநர்கள், பேச தடை, அரசு, போக்குவரத்து கழகம்

இந்த செய்தியை கேட்க

கோவை: பேருந்தில் முன் பக்கம் அமரும் பெண் பயணிகளிடம் பேசிக்கொண்டே ஓட்டுவதற்கு டிரைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணம் என்றாலே பஸ், ரயில் தான் பாதுகாப்பானது என்ற நிலையில், அப்படியான பஸ் பயணத்தையும் சில டிரைவர்களும், அவருடன் முன் பக்கம் அமர்ந்து பேச்சு கொடுத்து வருபவர்களும் பரலோகத்திற்கு செல்லும் பயணமாக மாற்றுகின்றனர்.

தொலைதூர பயணத்தில் டிரைவர் அசதியாக இருந்து தூங்கி விடக்கூடாது என்பதற்காக அவருடன் அவ்வப்போது பேச்சு கொடுத்து வரலாம். ஆனால், அதையே வசதியாக வைத்துக்கொண்டு பெண்களிடம் டிரைவர்கள் கடலை போட்டுக் கொண்டே வருவதால் வண்டியில் இருக்கும் மற்றவர்களின் நிலை அதோகதியாகி விடுகிறது.


latest tamil news
பேச்சில் கவனம் செலுத்தும் டிரைவர்கள், ரோட்டில் கவனம் செலுத்தாமல் வண்டியை எங்கேயோ கவிழ்த்து விடுகின்றனர். பெண்களுடன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்கள், பெண்கள் முன்னே தனது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட, மொத்த பயணிகளின் உயிரையும் பணயம் வைப்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. இதனால், பஸ்சின் உள்ளே இருக்கும் சில பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.


latest tamil news


இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், நேற்று (பிப்.,19) சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பஸ்சின் முன் பக்கம் அமரும் பெண்களிடம், பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் பேசக்கூடாது. அவ்வாறு விதியை மீறி நடக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கண் இமைக்கும் நேரத்தில் கூட விபத்து நிகழும் என்பதால், டிரைவர்கள் கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிடுவது நல்லது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
22-பிப்-202012:36:57 IST Report Abuse
Muthu Kumarasamy கேரளா அரசு பேருந்துகளில் ஓட்டுனருக்கு இடது புறம் இருக்கை கிடையாது. ஓட்டுனருக்கு பின்னால் இரும்பு வேலி இடதுபும் வரை போடப்பட்டுள்ளது. வாசலில் கதவு பொருத்தப்பட்டுள்ளது. தமிழக வண்டிகள் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது, வாங்கிய புதிதில். சரியான பராமரிப்பு இல்லாததால் தமிழக வண்டிகள் மிகவும் மோசமான நிலைமையை அடைகிறது. கேரளா வண்டிகளை போல நம் வண்டிகளும் நன்றாக பராமரிக்கப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-பிப்-202008:59:21 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னை புறநகர் ரயில்களிலும் (2,5,8,11) நான்கு பெண்கள் பெட்டிகளும் காலியாக இருப்பதும் எட்டு பொது பெட்டிகள் நிரம்பி வழிவதும் தினமும் பார்க்கும் கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-பிப்-202021:57:45 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னை பேருந்துகளில் ஆண்களுக்கு என்று இருக்கை ஒதுக்கீடு இல்லாததால் அனைத்து இருக்கைகளிலும் பெண்களே ஆக்கிரமித்து உட்காருவது நடக்கிறது. அனைத்து பேருந்துகளிலும் முன்பக்கம் ஆண்களுக்கு இருக்கை ஒதுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X