இலாகா இல்லாத முதல்வராகும் கெஜ்ரிவால்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லியில் 3வது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், 2015 ஐ போன்று இந்த முறையும் தன்வசம் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை. டில்லி அமைச்சரவையில் இலாகா இல்லாமல் இருக்கும் ஒரே அமைச்சர் இவர் மட்டுமே.latest tamil newsநேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஏன் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில், எனது முதல் மற்றும் முழுமையான ஒரே பணி டில்லி மக்களுக்காக உழைப்பதே. அவர்கள் என்னிடம் மிகப் பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர். அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

அதனால் தான் என் வசம் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை. இப்படி இருந்தால் மட்டுமே என்னால் அனைத்து அமைச்சகங்களின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும். நம்மிடம் அதிக துறைகளை வைத்துக் கொண்டால் மற்ற பணிகள் பாதிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.


latest tamil news


ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்த விலையில் தண்ணீர் வழங்குவோம் என்ற ஆம்ஆத்மியின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக 2017 ல் நீர் மேலாண்மை துறையை தன்வசம் வைத்திருந்தார் கெஜ்ரிவால். ஆனால் 2015 ல் முதல் முறை டில்லி முதல்வராக பதவியேற்ற போது கெஜ்ரிவால் தன்வசம் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை. இதே போன்று இம்முறையும் கெஜ்ரிவால் தன்வசம் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
21-பிப்-202003:29:14 IST Report Abuse
Kundalakesi நிறைய அறிவாளிகள் டெல்லி திவால் ஆகி விடும் என்று சொல்கிறார்கள். Revenue surplus for the next financial year is targeted at Rs 5,236 crore - 2019 2020 பட்ஜெட்டில் டெல்லிக்கு 5000 கோடி உபரி நிதி உள்ளது. அவர்கள் கடந்த 6 வருடத்தில் வரி வருவாயை பெருக்கி உள்ளனர். மக்களின் பணம் மக்களுக்கே. இது என்ன தமிழ்நாடா, கடன்ல இருக்கும் பொது இலவசம் தர. அவன் படித்தவன், IRS பதவியில் இருந்த அனுபவம். இந்திய வருவாய் ஆணையராக இருந்துள்ளார்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-பிப்-202023:05:14 IST Report Abuse
Vena Suna கஜானா காலி ஆகும் வரை இலவசங்கள் தொடரும்....
Rate this:
Cancel
20-பிப்-202021:12:43 IST Report Abuse
நக்கல் இப்பொழுது இலாக்கா இல்லாத முதல்வர், இன்னும் கொஞ்ச நாளில் இலவசங்கள் கொடுக்க முடியாமல் போய் மக்கள் காரி உமிழப்போகிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X