25 துப்பாக்கி, 12 ஆயிரம் தோட்டா எங்கே?: குற்றத்தை மறைக்கிறதா கேரளா?

Added : பிப் 20, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
25 துப்பாக்கி, 12 ஆயிரம் தோட்டாக்கள் மாயம், குற்றத்தை மறைக்கும், கேரள அரசு, Pinarayi Vijayan, police corruption, kerala, cag report

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: கேரள அரசு துறைகளில், 2013-18 ஆண்டுகளில் தணிக்கைத் துறையினர் ஆய்வு நடத்தினர். ஆய்வு தொடர்பான அறிக்கையை, கேரளா மாநில சட்டசபையில் கடந்த 12ம் தேதி சமர்ப்பித்தனர்.அறிக்கையில், 'காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகக் கையாளப்படவில்லை. துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் முறையாகப் பாதுகாக்கவில்லை' என, குற்றம்சாட்டப்பட்டது.


latest tamil news


கேரள தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சுனில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 2013-18 இடைப்பட்ட, 5 ஆண்டுகளில், திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் பட்டாலியனில் இருந்து, 25 ரைபிள்கள் (5.56 எம்.எம்.,) மற்றும் 12,061 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் மாயமாகி உள்ளன. அவை மீண்டும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.அந்த, 25 ரைபிள்கள் தொடர்பாக எந்த ஆவணங்களும் அங்கு இல்லை. காணாமல் போன ரைபிள்கள் குறித்து விசாரிக்க, குற்றப்பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பட்டாலியனில் உள்ள ஆவணங்கள் கூறுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.துப்பாக்கிகளும் தோட்டாக்களும் காணமல் போனதாக அவர் தெரிவித்திருப்பது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsகணக்கெடுப்பில் தவறு!

இதுதொடர்பாக விசாரிக்க, உள்துறைச் செயலர் விஸ்வாஸ் மேத்தாவுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். விஸ்வாஸ் மேத்தாவின் விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 'காவல்துறையில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. துப்பாக்கிகள் மாயமாகவில்லை. கணக்கெடுப்பதில் நடந்த தவறே குற்றச்சாட்டுகள் எழக் காரணம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஆனால், இந்த அறிக்கையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


latest tamil news350 போலி தோட்டாக்கள்

இந்நிலையில், கேரள ஏ.டி.ஜி.பி., டாமின் தக்கன்கரே தலைமையிலான கிரைம் பிராஞ்ச் போலீசார், திருவனந்தபுரம் போலீஸ் பட்டாலியனில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதில், ரைபிள்கள் மாயமாகவில்லை என்பதை நிரூபித்துள்ளனர். ஆனால், 350 போலி தோட்டாக்கள் கைப்பற்றியுள்ளனர்.'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை' போல, இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'மாயமான துப்பாக்கிகளும், போலித் தோட்டாக்களும் கேரள அரசு, பயங்கரவாதத்தை ஊக்கிவிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது' என, பலரும் கடுமையான விமரிசனங்களை பதிவு செய்து வருகின்றனர். துப்பாக்கி விவகாரம், முதல்வருக்குக் குறிவைத்துள்ளதால், கேரளாவில் இடதுசாரிகளின் அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21-பிப்-202004:47:36 IST Report Abuse
 nicolethomson நூறு சதவீதம் பாலைவன தாக்கம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-202003:56:07 IST Report Abuse
J.V. Iyer நக்ஸலைட்டுகளுக்கு நல்ல விலைக்கு வித்தாச்சு. ருபாய் நோட்டு அடிக்கும் இயந்திரத்தை இந்தியா நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர், அமைச்சர் பதவியில் இருந்தபோது பாகிஸ்தானுக்கு விற்றதாக கூறியிருந்தார். எனவே, இதுவும் சாத்தியம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
20-பிப்-202022:34:41 IST Report Abuse
Loganathan Kuttuva Emptycatridges not bullets.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X