பொது செய்தி

இந்தியா

ரூ.100 வச்சுட்டு வந்தா 'பாஸ்': பள்ளி முதல்வரின் பலே 'ஐடியா'

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
UP, Exam, SchoolPrincipal, Rs100, UPSEB, Advice, உத்தரபிரதேசம், பொதுத்தேர்வு, 100ரூபாய், விடைத்தாள், பள்ளி முதல்வர், தலைமையாசிரியர், அட்வைஸ், ஐடியா

இந்த செய்தியை கேட்க

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பள்ளி முதல்வர், பொதுத்தேர்வில் விடை தெரியவில்லை எனில், விடைத்தாளில் 100 ரூபாயை வைத்துவிட்டு வாருங்கள், மார்க் கிடைக்கும் என மாணவர்களுக்கு ஐடியா கொடுத்து மாட்டியுள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னோவை அடுத்த மாவே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் பிரவீன் மால், பொதுத்தேர்வுக்கு தயாராவது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் அறிவுரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பள்ளி மாணவர்கள் யாரும் தேர்வில் தோல்வியடைய மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். நீங்கள் (மாணவர்கள்) எதை கண்டும் பயப்பட தேவையில்லை. தேர்வு மையங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்கள் தான். எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காமல் விடையளிக்காமல் வந்துவிடாதீர்கள்.


பள்ளிகளில் தேர்வுகள் துவங்கி விட்டது. மாணவர்களின் பயத்தை போக்க உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் அந்தப் பள்ளியின் முதல்வர் பிரவீன் மால் சொற்பொழிவாற்றினார்.

latest tamil news



விடைத்தாளில் ரூ.100 மட்டும் வைத்துவிட்டு வந்தால் போதும், ஆசிரியர்கள் உங்களுக்கு நிச்சயம் மார்க் போடுவார்கள். 4 மார்க் கேள்வியெனில் 3 மார்க் போடுவார்கள். யாரிடமும் மாட்டிக்கொண்டால் பயப்பட வேண்டாம். ஜெய்ஹிந்த், ஜெய்பாரத். இவ்வாறு அவர் பேசினார்.பிரவீனின் இந்த உரையாடலை மாணவர்களுக்கு மத்தியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புகார் மையத்திற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து பிரவீன் கைது செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-பிப்-202021:32:57 IST Report Abuse
Sampath Kumar கட்டுமரத்துக்கு சொல்லி கொடுத்ததே கட்டாத மரம் தான் தாண்டி புரிந்தால் புரிஞ்சுக்கோ
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
20-பிப்-202020:16:05 IST Report Abuse
K.P  SARATHI வட இந்தியர்கள் இப்படிதான் தேர்ச்சி பெற்று மத்திய அரசாங்க வேலை பெற்று விடுகிறார்கள்
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
20-பிப்-202018:25:03 IST Report Abuse
dandy கட்டுமரம் சூத்திரம் நாடெங்கும் வியாபித்துள்ளது ...டாஸ்மாக் நாட்டிற்கு பெருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X