கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்வுகளில் முறைகேடு நடப்பது கேலிக்கூத்து: உயர்நீதிமன்றம் வேதனை

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: 2019ல் நடந்த சீருடை பணியாளர் பணி நியமனங்களுக்கான நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது கேலிக்கூத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளது.latest tamil newsகடந்த 2019ம் ஆண்டு, 8,888 இடங்களை நிரப்ப நடந்த சீரூடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பதாரர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சீருடை பணியாளர் தேர்வு பணி நியமன நடைமுறையை நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தேர்வில், ஒரே நிறுவனத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வானது எப்படி? தேர்வான அனைவரும் எப்படி ஒரே மாதிரியாக 69.5 மதிப்பெண் பெற்றார்கள். தேர்விலேயே முறைகேடு செய்தவர்கள், பணியில் சேர்ந்தால், போலீஸ்துறை நிலை என்ன ஆவது?


latest tamil news


ஒவ்வொரு தேர்விலும் மோசடி நடப்பதாக தகவல் வருகிறது. இதனால், தேர்வு நடத்தும் அமைப்புகள் மீது மக்களின் நம்பிக்கை போய்விட்டது. அனைத்து தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது கேலிக்கூத்தாக உள்ளதாக தெரிவித்த நீதிபதி, இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் டிஜிபி மற்றும் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
20-பிப்-202022:50:41 IST Report Abuse
Gnanasekaran Vedachalam இது வரன் முறை படுத்த பட்ட ஒழுக்கமான நிறுவனம் இந்த நிறுவனம் சீரமைக்க பட்டாள் தாள் நல்ல தரமான நேர்மையான கண்ணியமான கடமை உணர்வு உள்ள கட்டுப்பாடு உள்ள அர்ப்பணிப்போடு பணியாற்ற கூடிய நல்ல மனித வள ஆற்றல் உடைய சிறந்த பணியாளர்களை உட்புகுத்தினால் தான் பொது மக்களிடம் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும் . ஆதலால் பனி நியமன ஆணையத்தில் சிறந்த கல்வியாளர்களை பொறுப்பில் அமர்த்தி ஆணையத்தின் மதிப்ப மான்பை காக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
20-பிப்-202019:03:32 IST Report Abuse
Anand கேலிக்கூத்து என்பது இந்த திராவிடம் என்கிற பெயரில் தீய சக்திகள் தோன்றிய ஆண்டே துவங்கிவிட்டது. அந்த தீய சக்திகள் கட்டமைத்த அந்த கூடாரத்தை பெருகி இன்றும் அழியாமல் பாதுகாத்து தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கி வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
20-பிப்-202018:44:05 IST Report Abuse
Gnanam தகுந்த தண்டனை தக்க சமயத்தில் நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றமே கேலிக்கூத்தாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X