அரசியல் செய்தி

தமிழ்நாடு

யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்?: ஸ்டாலின் கேள்வி

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (153)
Share
Advertisement
DMK, Stalin, NPR, CAA, Resolution, CM, Palanisamy, EPS, திமுக, தலைவர், ஸ்டாலின், சட்டசபை, வெளிநடப்பு, சிஏஏ, என்பிஆர், முதல்வர், பழனிசாமி, இபிஎஸ், வேளாண் மண்டலம், மசோதா, தாக்கல்

இந்த செய்தியை கேட்க

சென்னை: சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவராமல் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் என முதல்வர் பழனிசாமியிடம், திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

இன்று (பிப்.,20) நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:

இன்றைய கூட்டத்தொடரில் இரு பிரச்னைகளை எழுப்பினேன். முதலாவதாக 11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனால், உடனடியாக சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என குரல் எழுப்பினேன். அது குறித்து பேச அனுமதி வழங்கவில்லை, நான் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.


latest tamil news


அடுத்ததாக, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை குறித்து கேட்டேன். தமிழகம் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் சிஏஏ.,வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். பார்லி.,யில் ஆதரவாக ஓட்டளித்த அரசுகள் கூட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால், தமிழகத்தில் அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர்.

அதுசரி, இனி வரவிருக்கும் என்.பி.ஆர்., மட்டுமாவது தடுத்து நிறுத்துங்கள் என கூறினேன். உடனே முதல்வரும் வருவாய்த்துறை அமைச்சரும் பிரசாரத்தில் பேசுவது போல், பேசுகின்றனர். ஓட்டுவங்கிக்காக தான் இப்படி பேசுகிறீர்கள் என எங்களை பார்த்து சொல்கின்றனர். அப்படியானால், நீங்கள் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்? எதற்காக தீர்மானம் கொண்டுவருவதில்லை?. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (153)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
23-பிப்-202012:37:29 IST Report Abuse
madhavan rajan மூலப்பத்திரம் மாதிரி பூசி மெழுகக்கூடாது. தமிழ் நாட்டில் CAA வாழ் பாதிக்கப்பட்டவர் ஒருவரைக் காண்பியுங்கள் என சவால் விட்டார் முதல்வர். இதுவரை சுடலை சவாலை ஏற்றாரா? பாதிக்கப்பட்டவரை காண்பித்தாரா? நிழலைப் பார்த்து பயந்தவர்களுக்கு எப்படி தைரியம் சொல்ல முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
21-பிப்-202001:17:24 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஸ்டாலின் யாருக்காக வக்காலத்து வாங்குகிறார்? நாட்டில் குடியிருக்க உரிமை இல்லாதவர்களுக்கு வக்காலத்து வாங்கலாமா?
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
21-பிப்-202001:12:01 IST Report Abuse
Aarkay தயவுசெய்து இந்த ஆள், இவர்பெற்ற செல்வம் போட்டோவை போடாதீர்கள் இந்த அரைகுறையெல்லாம் எங்களை ஆளவேண்டும் எங்கள் தலையெழுத்து சே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X