இந்த செய்தியை கேட்க
குருஷேத்ரா : பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. படித்த பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த விழாவில் பேசிய ராஜ்நாத் சிங் கூறுகையில், பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. நன்கு படித்த பட்டதாரிகளும், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களுமே பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்கள் வயது குறைந்தவர்களாக உள்ளனர். அதனால் வாழ்வில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

அதனால் இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து, பயங்கரவாதி அமைப்புக்களில் இணைத்து விடுகின்றனர். படித்தவர்கள் என்பதால் தான் அவர்கள் கொல்லும் மக்களின் அளவும் மாறுபடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE