இந்த செய்தியை கேட்க
திருவனந்தபுரம் : கேரளாவில் காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், முக்கிய தலைவர்களில் ஒருவருமான சிவக்குமாரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் முந்தைய உம்மன் சாண்டி ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சிவக்குமார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சமாகவும் வருமானத்திற்கு அதிகமாகவும் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிப்., 18 ம் தேதி அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக சிவக்குமாரும், அவரது நெருங்கிய உதவியாளர்கள் 3 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சிவக்குமாரின் மற்றும் அவரது உதவியாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE