இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்தியா வரும் அவரது மனைவி, டில்லி அரசு பள்ளிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப், தன் மனைவி மெலனியாவுடன் இரண்டு நாள் பயணமாக, பிப்.,24ம் தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன், குஜராத், உத்தர பிரதேச மாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உ.பி., மாநிலம் ஆக்ராவில், தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் இடையே இரண்டாவது நாளான 25ம் தேதி, மெலனியா, தெற்கு டில்லியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் சுமார் ஒரு மணி நேரத்தை செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 'மகிழ்ச்சி வகுப்பினை' டில்லி துணை முதல்வர் சிசோடியா அறிமுகப்படுத்தினார். இதில், தியானம் உள்ளிட்ட மனதை அமைதிப்படுத்தும் செயல்முறைகள் கற்றுத்தரப்படுகின்றன. இந்த மகிழ்ச்சி வகுப்பில் பங்கேற்க மெலனியா ஆர்வம் காட்டியுள்ளார். பிரதமர் மோடியுடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நேரத்தில் தனியாக பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோர் மெலனியாவை வரவேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE