சிறப்பு வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (20)
Share
assembly, cauvery, deltadistricts, cm, tamilnaducm, edapadipalanisamy, cmedapadipalanisamy, eps, cmepsm dmk, dkmchiefstalin, stalin, m.k.stalin, காவிரி, டெல்டாமாவட்டங்கள், வேளாண்சிறப்புமண்டலம், சட்டசபை,முதல்வர்இபிஎஸ், இபிஎஸ், முதல்வர்பழனிசாமி, எடப்பாடிபழனிசாமி, முதல்வர், திமுக, திமுகதலைவர்ஸ்டாலின், ஸ்டாலின், எதிர்க்கட்சிதலைவர்ஸ்டாலின், தி.மு.க.,  வெளிநடப்பு,

இந்த செய்தியை கேட்க

சென்னை: டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருந்தார். நேற்று (பிப்.,19) தலைமை செயலகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த மசோதாவை முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.


அனுமதி கிடைக்காது


இந்த சட்டத்தின்படி, எண்ணெய் , மீத்தேன், ஹைட்ரோ கார்பன், துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, செம்பு உருக்காலை, அலுமினியம் உருக்காலை, தோல் பதனிடுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. வேளாண் மண்டலம் குறித்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடரும். வேளாண் பயன்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களுமே வேளாண் நிலம் என பொருள்படும் எனக்கூறப்பட்டுள்ளது.


வேளாண் பகுதிகள்இந்த சட்டத்தின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் வருகிறது.


தி.மு.க., கேள்வி


latest tamil news
இந்த மசோதா மீது எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசும்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? வேளாண் நிலங்கள் ரியல் எஸ்டேட் போடப்படுவதை ஏன் தடுக்கவில்லை?. ஏற்கனவே உள்ள திட்டங்கள் பாதிக்கப்படாது என்று சட்டத்தில் உள்ளது. நடைமுறையில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சட்ட முன்வடிவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும். இச்சட்டம் , விவசாயத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும் சட்டமாக இருக்க வேண்டும் எனக்கூறினார்.


வெளிநடப்பு


இதற்கு பதிலளித்த முதல்வர் இ.பி.எஸ்., காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் உருவாகும். திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால், அதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டு வரவில்லை என்றார்.
தொடர்ந்து, மசோதா, தேர்வுக்குழுவிற்கு அனுப்பாததை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


முதல்வர் வருத்தம்


latest tamil news


பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., பேசும்போது, அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என கருதி திமுக வெளிநடப்பு செய்துள்ளது மசோதா நிறைவேற்றப்பட உள்ள நிலையிலும், அரசியல் செய்து திமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது. வேளாண் மண்டல சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். பல ஆண்டு கால விவசாயிகளின் கோரிக்கை அனைவரின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியிருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


கவர்னர் ஒப்புதலுக்குஇதனை தொடர்ந்து பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவோடு டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா நிறைவேறியது. இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X