பொது செய்தி

இந்தியா

‛‛ராணுவ வீரர் வீடா... தெரியாம வந்துட்டேன் மன்னிச்சுடுங்க'': இப்படிக்கு திருடன்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொச்சி: தான் திருட வந்தது, ராணுவ வீரரின் வீடு என்பதை அறிந்ததும், வீட்டுச் சுவரில், 'என்னை மன்னித்துவிடுங்கள்' என, திருட வந்தவன் எழுதிச் சென்ற சுவாரஸ்யம் கேரளாவில் நடந்துள்ளது.



latest tamil news


கொச்சி அருகே, திருவாங்குளம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஐந்து கடைகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடையை ஒட்டியுள்ள முன்னாள் ராணுவ வீரர் ஐசக் என்பவரின் வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. ஐசக் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்.


latest tamil news


அவர் வீட்டின், முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற திருடனுக்கு அந்த வீடு, ராணுவ வீரரின் வீடு எனத் தெரிந்ததும் வீட்டின் சுவரில், 'இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். கடைசி நேரத்தில் தான், அவரது தொப்பியை வைத்து இது ராணுவ வீரரின் வீடு எனத் தெரிந்தது. தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என, மலையாளத்தில் எழுதி விட்டு திருடன் தப்பிச் சென்றுள்ளான்.


latest tamil news


வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட எந்த விலை உயர்ந்த பொருட்களும் திருடப்படவில்லை. ஆனால், வீட்டின் பீரோவில் வைத்திருந்த மது பாட்டில் ஒன்றை எடுத்து, அதில் சிறிதளவு (ஒரு 'பெக்') மட்டும் குடித்து விட்டு சென்றுள்ளான் அந்த திருடன்!

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-பிப்-202005:20:11 IST Report Abuse
 nicolethomson திருடர் கழகத்தினர் இந்த திருடனின் மூச்சாவை குடிப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
21-பிப்-202019:26:20 IST Report Abuse
mohan I AM NOT THAT MUCH BAD MAN...இப்படிக்கு வடிவேலு....
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
21-பிப்-202018:26:24 IST Report Abuse
mohan இந்த அளவு மனிதாபிமானம் நாட்டில் உள்ள ஒரு சில முக்கியமான ஆட்களிடம் இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X