ராமர் பெயரில் அரசியல்: மஹா., அமைச்சர் புகார்| Dinamalar

ராமர் பெயரில் அரசியல்: மஹா., அமைச்சர் புகார்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (25)
Share
RamarMandir, NawabMalik, CabinetMinister, Maharashtra, NCP, BJP, ராமர், கோயில், அரசியல், பாஜ, பாஜக, மஹாராஷ்டிரா முதல்வர், தேசியவாத காங்கிரஸ்,

இந்த செய்தியை கேட்க

மும்பை: ராமர் பெயரில் பாஜ., அரசியல் செய்வதாக தேசியவாத காங்., கட்சியின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 பேர் கொண்ட அறக்கட்டளையை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதற்கான நிர்வாகிகள் நேற்று (பிப்.,19) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர அமைச்சரவையில் தேசியவாத காங்., கட்சியின் நவாப் மாலிக், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி:


latest tamil news




ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு வழியை வழங்கியுள்ளது. அதேநேரத்தில், மசூதி கட்டுவதற்கும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கோர்ட்டின் தீர்ப்பினை ஏற்பதா வேண்டாமா என முஸ்லிம்கள் குழம்புகின்றனர். ராமர் பெயரில் பாஜ., அரசியல் செய்கிறது. இதுவரையில் அவர்கள், அயோத்தியில் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X